ஒரே நாளில் 12 விமானங்கள் ரத்து

ஒரே நாளில் 12 விமானங்கள் ரத்து
X

சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை குறைவால் போதிய பயணிகள் இல்லாமல் இன்று ஒரே நாளில் 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் திடீரென பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது.சென்னையிலிருந்து புறப்பாடு,வருகை என பயணிகள் சுமாா் 18,500 போ் மட்டுமே பயணிக்கின்றனா். அது போல் புறப்பாடு,வருகை என 231 விமானங்கள் மட்டுமே இன்று இயக்கப்படுகின்றன.

இதற்கிடையே சென்னையிலிருந்து காலை 7.05 மணிக்கு புறப்பட வேண்டிய விசாகப்பட்டிணம், காலை 9.05க்கு புறப்பட வேண்டிய கொச்சி, காலை 9.10 பாட்னா,காலை 10.05 மும்பை,காலை 11.30 கொச்சி, மாலை 6.30 கவுகாத்தி ஆகிய 6 விமானங்கள் போதிய பயணிகள் இல்லாமல் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதைப்போல் இந்த இடங்களிலிருந்து சென்னைக்கு திரும்பி வர வேண்டிய 6 விமானங்களும் ரத்தாகியுள்ளன. இன்று ஒரே நாளில் மட்டும் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் இல்லாமல் 12 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!