மக்கள் பிரச்சனைக்கு 100 நாளில் தீர்வு, ஸ்டாலின்

மக்கள் பிரச்சனைக்கு 100 நாளில் தீர்வு, ஸ்டாலின்
X

திமுக ஆட்சிக்கு வந்ததும் போர்க்கால அடிப்படையில் மக்கள் பிரச்னைகளுக்கு 100 நாளில் தீர்வு காணப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தேர்தலை மனதில் வைத்தே ரூ.2,500 கொடுக்கப்பட்டது. உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் புதிய தேர்தல் பிரசாரத்தை வரும் 29ஆம் தேதி முதல் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து தொடங்குகிறேன். மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதே எனது முதல் பணி என்று உறுதியளிக்கிறேன். திமுக ஆட்சிக்கு வந்ததும் போர்க்கால அடிப்படையில் மக்கள் பிரச்னைகளுக்கு 100 நாளில் தீர்வு காணப்படும் என்றார்.

Tags

Next Story