கட்டுமான பொருட்களின் விலையை குறைக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் தங்கம் தென்னரசு

கட்டுமான பொருட்களின் விலையை குறைக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் தங்கம் தென்னரசு
X

தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு

கட்டுமான பொருட்களின் விலையை குறைக்காவிட்டால் அரசு வேடிக்கை பார்க்காது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் - தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு.

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் கட்டுமான பொருட்கள் உற்பத்தியாளர்களிடம் தொழில்துறை அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்: கடுமான பொருட்கள் விலையேற்றத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து முதல்வரின் அறிவுத்தல்படி சிமென்ட் விலையேற்றம் குறித்து சிமென்ட் மற்றும் கம்பி உற்பத்தியாளர்களிடம் பேசினோம். மக்கள் பாதிக்கப்படுவதை ஏற்க முடியாது என்று உற்பத்தியாளர்களிடம் கூறியுள்ளோம். சம்மந்தப்பட்ட உற்பத்தியாளர்கள் உடனே விலை குறைப்பு குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம். மக்களின் நிலையை புரிந்து விரைவாக விலை குறைப்பில் உற்பத்தியாளர்கள் முன்வரா விட்டால் அரசு அதனை வேடிக்கை பார்க்காது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.

Tags

Next Story
கல்வி கடனை வசூலித்த பின் ஏஜென்சி மூலம் மிரட்டல்: ஐ.ஓ.பி., வங்கிக்கு ரூ.5 லட்சம் அபராதம்!