முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குங்கள் - மு.கஸ்டாலின் வேண்டுகோள்

முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குங்கள் - மு.கஸ்டாலின் வேண்டுகோள்
X
கொரோனா பேரிடரை எதிர்கொள்ள ...

கொரோனா பேரிடரை சமாளிக்க, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குமாறு பொதுமக்கள், சமூக நல அமைப்புகள், பெருந்தொழில் நிறுவனங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில்

கோவிட் தொற்றின் இரண்டாவது அலையால் நமது மாநிலம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

தற்போது நமது மாநிலத்தில் 1,52,389 பேர் இத்தொற்றிற்காக சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.

இவர்களில் 31,410 பேர் ஆக்சிஜன் உதவியோடு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கையை உயர்த்துதல் , அனைத்து உயிர் காக்கும் மருந்துகளையும் தடையின்றி கிடைக்கச் செய்தல்,ஆக்சிஜன் விநியோகத்தை மேம்படுத்துதல் , கூடுதல் மருத்துவ மற்றும் பிற பணியாளர்களைப் பணி அமர்த்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .

எனவே,அரசின் முனைப்பான முயற்சிகளுக்கு நமது சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தங்களால் இயன்ற வகையில் உதவி செய்ய வேண்டியது அவசியம் .

இத்தகைய இடர்ப்பாடுகளே மனித நேயத்தை வெளிப்படுத்துவதற்குச் சிறந்த வாய்ப்பாக அமைகின்றன . நாம் அனைவரும் ஒன்றுகூடி இப்போரை வெல்வதற்கான நேரம் இது .

இச்சூழலில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கிட வேண்டுமென்று உங்கள் அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுக்கின்றேன் .

இப்பேரிடர் காலத்தில் தாங்கள் ஒவ்வொருவரும் அளிக்கக்கூடிய நன்கொடைகள் அனைத்தும் ,ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் சேமிப்பு நிலையங்கள் அமைத்தல் ,ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகளை அமைத்தல்,ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள்,ஆர்.டி பி சி ஆர் கிட்டுகள் , உயிர்காக்கும் மருந்துகள் , தடுப்பூசிகள் மற்றும் பிற மருத்துவக் கருவிகளை வாங்குதல் போன்ற கரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு மட்டுமே முழுமையாகப் பயன்படுத்தப்படும் என நான் உறுதி அளிக்கிறேன் .

மேற்கூறிய நடவடிக்கைகளுக்காக பெறப்பட்ட நன் கொடை விவரங்கள் மற்றும் இந்த நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் வெளிப்படையாக பொதுவெளியில் வெளியிடப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன் .

இவ்வாறு அளிக்கப்படும் நன்கொடைகளுக்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80( ஜி )- இன்கீழ் 100 விழுக்காடு வரிவிலக்கு உண்டு . வெளிநாடு வாழ் இந்தியர்கள் அல்லது வெளிநாட்டு மக்களிடமிருந்து பெறப்படும் நிவாரணத்திற்கு அயல் நாட்டு பங்களிப்பு ( ஓழுங்காற்று ) சட்டம் 2010, பிரிவு 50- இன்கீழ் விலக்களிக்கப்படும் .

நன்கொடைகளை மின்னணு முறை மூலம் பின்வருமாறு வழங்கலாம் .

வங்கி இணைய சேவை அல்லது கடன் அட்டை / பற்று அட்டையின் மூலமாக கீழ்க்கண்ட இணையதளம் வழியாகச் செலுத்தி இரசீதினைப் பெற்றுக்கொள்ளலாம் .

Electronic Clearing System (ECS) / RTGS / NEFT மூலமாக கீழ்க்காணும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு நேரடியாக அனுப்பலாம் .

வங்கி பெயர் - இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை - தலைமைச் செயலகம் சென்னை 600 009

சேமிப்பு கணக்கு எண் - 117201000000070 IFSC Code - IOBA0001172 MICR Code - 600020061 CMPRF PAN - ஆஅஃக்௦௦௩௮பி

என தெரிவிக்கப்ட்டுள்ளது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil