கொரோனா தொற்று- காவல்துறை உதவி ஆய்வாளர் மற்றும் ஏட்டு பரிதாபமாக உயிரிழப்பு

கொரோனா தொற்று- காவல்துறை உதவி ஆய்வாளர் மற்றும் ஏட்டு பரிதாபமாக உயிரிழப்பு
X
காக்கும் காவல்துறையை காவு வாங்கலாமா?

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலைக்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள் என தொடர்ச்சியாக உயிரிழந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு காவல்துறை உதவி ஆய்வாளர் மற்றும் ஏட்டு ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சென்னை பாதுகாப்பு பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த சின்னக்கண்ணு என்பவர் கொரோனா தொற்று காரணமாக கடந்த 28 ஆம் தேதி சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.இருப்பினும் சிகிச்சை பலனளிக்காத காரணத்தினால் சின்னக்கண்ணு நேற்று அதிகாலை உயிரிழந்தார்.எஸ்.ஐ சின்னக்கண்ணுவின் சொந்த ஊரான வேலூர் மாவட்டத்தின் சேனூரில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இதேப்போன்று,சென்னை ஆயுதப்படை தலைமை காவலராக பணியாற்றி வந்த கமலநாதன் என்பவர் கடந்த மாதம் 25 ஆம் தேதி காய்ச்சல் காரணமாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.அதன் பின்னர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை கமலநாதன் உயிரிழந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த சின்னக்கண்ணு மற்றும் கமலநாதன் ஆகிய இருவருக்கும் காவல்துறை சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது.



Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!