துபாய்க்கு கடத்த முயன்ற வெளிநாட்டு பணம் பறிமுதல்

துபாய்க்கு கடத்த முயன்ற வெளிநாட்டு பணம் பறிமுதல்
X

சென்னையிலிருந்து துபாய்க்கு கடத்த முயன்ற 1.45 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார்.

துபாய் செல்லவிருந்த இண்டிகோ விமானத்தில் ஏறுவதற்காக சென்று கொண்டிருந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த நூர் முகம்மது சுல்தான் (60), என்பவர் வெளிநாட்டு பணம் கடத்துவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார்.பின்னர் அதிகாரிகள் அவரை சோதனையிட்டனர். அப்போது அவரது கால் சட்டை பையிலிருந்து ரூ 1.45 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் விமானத்திற்கு அனுப்பப்பட்ட அவரது பை திரும்ப பெறப்பட்டது. அதை திறந்து பார்த்த போது, ரூ 68.83 லட்சம் மதிப்பிலான சவுதி அரேபிய ரியால்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் ரூ. 70.28 லட்சம் வெளிநாட்டு பணம் சுங்க சட்டவிதிகளின்படி பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

Tags

Next Story
ai as the future