விமானத்தில் பயணிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
கொரோனா வைரஸ் ஊரடங்கிற்கு பின்பு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் முதல் முறையாக பயணிகள் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்ததோடு, விமான சேவைகளும் 254 ஆக அதிகரித்துள்ளதால் விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.
சென்னை விமானநிலையத்தில் கொரோனா வைரஸ் ஊரடங்கால் கடந்த ஆண்டு மாா்ச் 24 ஆம் தேதியிலிருந்து மே 24 ஆம் தேதி வரை 2 மாதங்களுக்கு உள்நாட்டு விமான சேவைகள் முழுவதுமாக தடைப்பட்டிருந்தது. 2020 மே 25 ஆம் தேதியிலிருந்து உள்நாட்டு விமான சேவைகள் குறைந்த எண்ணிக்கையில் இயங்க தொடங்கின.பயணிகள் எண்ணிக்கையும்,விமான சேவைகளும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வந்தன.இந்நிலையில் சென்னை உள்நாட்டு விமானநிலையத்திலிருந்து நேற்று புறப்பட்ட விமானங்கள் 118, வருகை தந்த விமானங்கள் 119, இதில் மொத்தம் 237 விமானங்கள் இயக்கப்பட்டு 25,600 போ் பயணித்தனா்.
இன்று ஒரே நாளில் சென்னை உள்நாட்டு விமானநிலையத்திலிருந்து புறப்பட்ட விமானங்கள் 127,வருகை தந்த விமானங்கள் 127, என மொத்தம் 254 விமானங்களாக அதிகரித்துள்ளன. அதேபோல் புறப்பட்ட விமானங்களில் 12,400 பேரும்,வருகை தந்த விமானங்களில் 17,680 பேரும் என மொத்தம் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோா் பயணிக்க முன்பதிவு செய்துள்ளனா்.கொரோனா வைரஸ் ஊரடங்கிற்கு பின்பு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இன்று அதிகப்பட்சமாக 254 விமான சேவைகளும்,பயணிகள் எண்ணிக்கை 30 ஆயிரத்தையும் கடந்துள்ளது.இதற்கு காரணம் மக்களிடையே கொரோனா வைரஸ் பீதி வெகுவாக குறைந்து பயணிகள் சகஜமாக பயணிக்கத்தொடங்கி விட்டனா்.அதோடு பொங்கல் பண்டிகை தொடா் விடுமுறையில் வெளியூா் சென்றிருந்தவா்கள் நேற்றும் இன்றும் ஒட்டுமொத்தமாக சென்னை திரும்புகின்றனா்.எனவே பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது என்று விமானநிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu