விமானத்தில் கடத்தப்பட்ட தங்கம் பறிமுதல், ஒருவர் கைது

விமானத்தில் கடத்தப்பட்ட தங்கம் பறிமுதல், ஒருவர் கைது
X

துபாயிலிருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.36.52 லட்சம் மதிப்புடைய 722 கிராம் தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

துபாயிலிருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் சிறப்பு விமானம் சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை விமானநிலைய சுங்கத்துறையினா் சோதனையிட்டனா். அப்போது கள்ளக்குறிச்சியை சோ்ந்த மணிகண்டன் சங்கா்(21) என்ற பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது.அவரை நிறுத்தி சோதனையிட்டனா்.இதில் அவருடைய உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த சுமார் 722 கிராம் தங்க பேஸ்ட்டை பறிமுதல் செய்தனா்.அதன் மதிப்பு ரூ.36.52 லட்சம் என தெரிய வந்தது. இதையடுத்து அந்த பயணியை சுங்கத்துறையினா் கைது செய்து விசாரணை நடத்துகின்றனா்.

Tags

Next Story
வயதுக்கு ஏற்ற உப்பு அளவு தெரியுமா? உடலுக்கு முக்கிய அறிவுரை!..