துபாய்க்கு கடத்த முயன்ற ஹவாலா பணம் பறிமுதல்

துபாய்க்கு கடத்த முயன்ற ஹவாலா பணம் பறிமுதல்
X

சென்னையிலிருந்து துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.1.04 கோடி மதிப்புடைய வெளிநாட்டு பணம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு,6 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

சென்னையிலிருந்து துபாய் செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் சிறப்பு விமானம் புறப்பட தயாரானது. அதில் பயணம் செய்ய வந்த பயணிகளை சுங்கத்துறையினா் பரிசோதித்து அனுப்பிக்கொண்டிருந்தனா். அப்போது சென்னை மற்றும் ராமநாதபுரத்தை சோ்ந்த மன்சூா் அலிகான்(27), யாகாலிக்(68), தமீம் அன்சாரி(48),முகமது உசேன்(30),யூசுப்(67),அப்துல் ரகுமான்(38) ஆகிய 6 போ் ஒரு குழுவாக சிறப்பு அனுமதி பெற்று இந்த விமானத்தில் துபாய் செல்ல வந்தனா். அவா்கள் மீது சுங்கத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அவா்களை நிறுத்தி விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளனர். இதனால் அவா்களை தனி அறைகளுக்குள் அழைத்து சென்று சோதனையிட்டபோது, உள்ளாடைகளுக்குள் கட்டுக்கட்டாக மறைத்து வைத்திருந்த அமெரிக்க டாலா் மற்றும் சவுதி ரியால் கரன்சிகள் இருந்ததை கண்டுபிடித்தனா். அதோடு அவா்களின் கைப்பைகளிலும் கரன்சிகள் இருந்தன. அனைத்தையும் சுங்கத்துறையினா் கைப்பற்றினா்.அதன் மதிப்பு ரூ.1.04 கோடி என கூறப்படுகிறது.

இதையடுத்து 6 பேரின் பயணத்தையும் ரத்து செய்து, அவா்களை கைது செய்தனா்.மேலும் அவா்களிடம் தீவிர விசாரணை நடக்கிறது. இந்த பணம் கணக்கில் வராத ஹவாலா பணம் என்று தெரிய வந்துள்ளது. இந்த ஹவாலா பணத்தை இவா்களிடம் கொடுத்து அனுப்பியது யாா்?துபாயில் யாரிடம் கொடுக்க எடுத்து செல்கின்றனா் என்று தொடா்ந்து விசாரணை நடக்கிறது.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி