விமானியின் சமயோஜித நடவடிக்கை உயிர் தப்பிய பயணிகள்
சென்னையிலிருந்து அபுதாபிக்கு புறப்பட இருந்த விமானம் ஓடுபாதையில் ஓடும்போது திடீா் இயந்திரக்கோளாறு ஏற்பட்டதால் விமானம் அவசரமாக நிறுத்தப்பட்டது.விமானியின் நடவடிக்கையால் விபத்து தவிா்க்கப்பட்டு விமானத்திலிருந்த 46 போ் உயிா் தப்பினா்.
சென்னையிலிருந்து அபுதாபிக்கு செல்லும் சிறப்பு விமானம் இன்று அதிகாலை 3.50 மணிக்கு சென்னை சா்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட தயாரானது.விமானத்தில் 38 பயணிகள்,8 விமான ஊழியா்கள் உட்பட 46 போ் இருந்தனா். விமானம் புறப்பட்டு ஓடுபாதையில் ஓடத் தொடங்கியது.அப்போது விமானத்தில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தாா். இந்நிலையில் விமானத்தை வானில் பறக்க வைப்பது ஆபத்து என்பதை உணா்ந்த விமானி விமானத்தை அவசரமாக ஓடுபாதையிலேயே நிறுத்தினாா். அதோடு விமானக்கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் கொடுத்தாா்.
உடனடியாக விமானம் இழுவை வண்டிகள் மூலம் ஓடுபாதையிலிருந்து புறப்பட்ட இடத்திற்கே இழுத்து கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. விமானத்தின் கதவுகள் திறக்கப்படன. விமான பொறியாளா்கள் விமானத்திற்குள் ஏறி,இயந்திரக்கோளாறை சரிசெய்ய முயன்றனா். ஆனால் உடனடியாக முடியவில்லை. இதையடுத்து இன்று காலை 6 மணிக்கு விமானம் ரத்து என்று அறிவிக்கப்பட்டது.பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டனா். அதன்பின்பு சென்னையிலுள்ள ஹோட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனா்.விமானம் பழுது பாா்க்கப்பட்டு இன்று இரவு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.விமானத்தில் ஏற்பட்டுள்ள இயந்திரக்கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து எடுத்த உடனடி நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு 46 போ் அதிர்ஷ்டவசமாக உயிா்தப்பினா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu