விமானத்தில் கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல் 2 பேர் கைது

விமானத்தில் கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல் 2 பேர் கைது
X

துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி கொண்டு வரப்பட்ட ரூ.48.27 லட்சம் மதிப்புடைய 937 கிராம் தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

துபாயிலிருந்து ஏா்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று அதிகாலை சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினா் சோதனையிட்டனா். அப்போது ராமநாதபுரத்தை சோ்ந்த முகமது உசேன்(28),நாகப்பட்டினத்தை சோ்ந்த முகமது அசாரூதின்(31) ஆகிய 2 பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவா்களை நிறுத்தி சோதனையிட்டனா்.இதில் அவா்களுடைய உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த தங்கத்தகடுகள்,தங்க பேஸ்ட்கள்,தங்கக்கட்டிகளை அதிகாரிகள் கைப்பற்றினா்.இருவரிடமிருந்தும் மொத்தம் 937 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது.அதன் மதிப்பு ரூ.48.27 லட்சம்.இதையடுத்து இருவரையும் சுங்கத்துறை கைது செய்து விசாரணை நடத்துகின்றனா்.விமானத்தில் கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல் 2 பேர் கைது

Tags

Next Story
ai and future of education