1990களில் சென்னையின் காதலர்கள் சொர்க்கம் எது?

1990களில் சென்னையின் காதலர்கள் சொர்க்கம் எது?
X

சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக மாறிய ஸ்பென்சர் பிளாசா ( கோப்பு படம்)

1990 களில் சென்னையில் பிரமித்தவைகள் ரெண்டு. ஒன்று ஸ்பென்சர்ஸ் பிளாசா. இன்னொன்று சரவண பவன்.

ஸ்பென்சர் பிளாசா 90 களில் அது காதலர்களின் சொர்க்கம் அவ்வளவு ஏன் முழுவதும் குளிரூட்டப்பட்ட அந்த வளாகம் சிங்கிள்ஸ்களுக்குமே அது சொர்க்கம் தான். ஒரு பெரிய LED திரையில் கிரிக்கெட் பார்க்கலாம். கால் பந்தாட்டம் பார்க்கலாம். நூறு ரூபாய்க்கு காட்டன் சட்டை எடுக்கலாம். கையில் காசே இல்லையென்றாலும் எஸ்கலேட்டர்களில் ஏறி இறங்கி சந்தோஷப்பட்டுக்கலாம். எப்போதுமே ஜே ஜே வென இருந்த அந்த வளாகம் EA, ஸ்கை வாக் வந்த பிறகு அப்படியே களையிழந்து போனது. எப்போதும் பிசியாக இருந்த இப்போது வணிகவளாகங்கள் காற்று வாங்கிக் கொண்டிருக்கின்றன

அடுத்ததாக சரவணபவன். பிராட்வே சரவணபவன் 90 களில் செம பிசியாக இருக்கும். கல்யாண விருந்து என்பார்களே. அது அங்கே தினம் தினம் நடக்கும். டோக்கன் வாங்க நீண்ட க்யூ. அப்புறம் டேபிள் கிடைக்க காத்திருப்பு என ஒவ்வொரு நாளும் காத்திருந்து காத்திருந்து தான் சாப்பிடவேண்டும். ஆனாலும் காத்திருப்புக்கு ஒர்த்தான சாப்பாடு கிடைப்பது உறுதி. அந்த ஹோட்டலில் 1990ம் ஆண்டுகளில் ஒரு சாப்பாடின் விலை 6.50. அந்த 6.50 க்கு தலை வாழையிலை போட்டு ரா ரைஸ்சா, பாயில்ட் ரைஸ்சா என விசாரித்து சுடச்சுட கொண்டு வந்து வைத்ததெல்லாம் மறக்க முடியாது, அப்போது சாப்பாடு மட்டும் தான் லிமிட் கூட்டு பொறியல் சாம்பார் ரசம் மோரெல்லாம் அன்லிமிட். குறைந்தது மூன்று முறையாவது கூட்டு பொறியல்களை வாங்கி சாப்பிடுவார்கள்.

அதெல்லாம் அந்த காலம். ஆனால் இப்போது தட்டில் தான் சாப்பாடு தலைவாழை இலை கிடையாது. அளவு கிண்ணங்களில் தான் கூட்டுப் பொரியல்கள் சாம்பார் ரசம் தரமும் சுவையும் குறைந்து மூன்றாம் தர சாலையோர மோட்டல்கள் மாதிரி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. சரவணபவன். ஜார்ஜ் டவுன் சரவணபவனில் 90 களில் கூட்டம் அத்தனை அள்ளும் இன்றைக்கும் அதன் தேய்ந்த படிகட்டுகள் எத்தனை லட்சம்பேருக்கு வயிறார உணவளித்திருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்லும்

ஆனால் இன்று அதே ஜார்ஜ் டவுன் சரவணபவனின் நிலை கண்டால் லேசாக கண்ணில் நீர் கசிகிறது தரை மற்றும் இரண்டு தளங்களில் ஒரே நேரத்தில் 500 பேர் அமர்ந்து சாப்பிடுமளவிற்கு செயல்பட்டுக் கொண்டிருந்த அந்த சரவண பவன் இப்போது முதல் மாடி மட்டுமே அதிலும் பாதியாளவே என்று சுருங்கி யாராவது வரமாட்டார்களா என டேபிள்கள் காற்று வாங்கிக்கொண்டிருக்கின்றன.

சரவணபவனுக்கே உறித்தான தேங்காய் சட்னி இப்போது அதன் கிளைகளில் எங்கேயுமே இல்லை. சட்னிகளின் சுவையே தாளிப்புகளில் தான் இருக்கிறது. ஆனால் தாளிப்பே இல்லாமல் தான் சட்னிகள் வருகிறது. முன்பு போல் கவனிப்பும் இல்லை. எல்லாம் வட இந்திய ஊழியர்களாத்தான் வேலை செய்கிறார்கள் வந்துட்டியா போட்டத சாப்ட்டு பில்ல கொடுத்துட்டு போயிட்டே இரு என்பது போல்தான் தற்போதைய அவர்களின் சேவை இருக்கிறது ஆழ்ந்த வருத்தங்கள் சரவணபவன்.

சரவணபவன் அதன் நிறுவனரின் 77 வது பிறந்த நாள் என்று 77 ரூபாய்க்கு மினி டிபன் வழங்கினார்கள் அதில் தோசை ஒரே புளிப்பு. தேங்காய் சட்டினிக்கு உப்பே இல்லை. காரசட்டினி அப்படியே பச்சை வாடை மொத்தத்தில் 77 ரூபாக்குக்கூட அது ஒர்த்தே இல்லை.

ஸ்பென்சர் பிளாசா மூன்றாவது தளத்துக்கு மேல் இருக்கும் அலுவலகங்களை சினி மால்களாக மாற்றி விட்டால் புது பொழிவடைந்து விடும். மற்ற மால்களுக்கு போட்டியாக வந்து விடும். ஆனால் சரவணபவன் பழைய கம்பீரத்துக்கு வரும் வாய்பே இல்லை.

Next Story