சென்னை புது கமிஷனர் ஜனவரியில் போட்ட ஆர்டர்..!

சென்னை புது கமிஷனர்  ஜனவரியில் போட்ட ஆர்டர்..!
X

சென்னை மாநகர கமிஷனர் அருண் (கோப்பு படம்)

பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் சொத்து தகராறு, புகார்கள் மீது விசாரணைக்கு எஸ்.பி அல்லது காவல் ஆணையர்களிடம் அனுமதி பெற வேண்டும்.

அருண் ஏ.டி.ஜி.பி.,யாக இருந்த போது வெளியான ஒரு உத்தரவு பற்றி கடந்த ஜனவரி மாதம் வெளியான செய்தியை பார்க்கலாம்.

உரிய ஒப்புதல் இன்றி விசாரணை மேற்கொண்டால் சட்ட விரோதமாக கருதப்படும், ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும். -ஏடிஜிபி அதிரடி.

எப்.ஐ.ஆர்., சி.எஸ்.ஆர்., மற்றும் நீதிமன்ற வழிகாட்டுதல் இல்லாமல் எந்த ஒரு மனுக்கள் மீதும் காவல்துறை விசாரணையும் நடத்தக் கூடாது. பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் சொத்து தகராறு, புகார்கள் மீது விசாரணைக்கு தலையிடுவதை காவல் நிலையத்தில் வைத்து பேசுவதை தவிர்க்க வேண்டும்.

நிலம், வீடு, வாடகை உள்ளிட்ட சிவில் பிரச்னைகளில் காவல்துறையினர் தலையிடக்கூடாது என நீதிமன்றம் ஏற்கனவே பல முறை அறிவுறுத்தியுள்ளது. எனினும், காவல்துறையினர் விசாரிப்பதில் மட்டுமே தீர்வு கிடைக்கும் என நம்பும் மக்கள் சிவில் பிரச்சினைகளுக்கும் போலீசாரை அணுகும் நிலை உள்ளது. இதுபோன்ற நேரத்தில் காவல்துறையினரும் இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.

சில நேரங்களில் சட்டத்தை மீறியும் இத்தகைய சிவில் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படுவதாகவும் புகார்கள் எழுகின்றன. சிவில் தொடர்பான பிரச்சனைகள் பேசி பார்த்தும் முடியாத புகார்களை, நீதிமன்றத்தில் தீர்த்து கொள்ளும்படி கூறி காவல்துறையினர் அனுப்பி வைக்கின்றனர். எனினும், சிவில் பிரச்சினைகள் போலீசாரிடம் செல்வது தொடர்பாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில், சிவில் பிரச்சினைகளில் அவசியம் இன்றி போலீசார் தலையிடக் கூடாது என்று போலீசாருக்கு ஏடிஜிபி அருண் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக ஏடிஜிபி அருண் கூறியதாவது:- எப்.ஐ.ஆர், சி.எஸ்.ஆர் மற்றும் நீதிமன்ற வழிகாட்டுதல் உள்ளிட்டவை இன்றி எந்த ஒரு மனுக்கள் மீதும் காவல்துறை விசாரணையும் நடத்தக் கூடாது.

பணத்தகராறு, சொத்து தகராறு, வழித்தட தகராறு போன்ற சிவில் விவகாரங்களில் தலையிடுவதை போலீசார் தவிர்க்க வேண்டும். சிவில் விவகாரங்களில் தலையிடுவது அவசியம் என கருதினால் மாவட்ட எஸ்.பி அல்லது காவல் ஆணையர்களிடம் அனுமதி பெற வேண்டும். உரிய ஒப்புதல் இன்றி விசாரணை மேற்கொண்டால் சட்ட விரோதமாக கருதப்படும், ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும்”என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!