Chennai Meteorological Centre-தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழை..! வானிலை மையம் அறிவிப்பு..!

Chennai  Meteorological Centre-தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழை..! வானிலை மையம் அறிவிப்பு..!
X

chennai meteorological centre-மழை (கோப்பு படம்)

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Chennai Meteorological Centre, Rain Announcement

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் பரவலாக ஆங்காங்கு மழை பெய்து வருகிறது. சில இடங்களில் இரவு, பகலாக விடாமலை கனமழை கொட்டித் தீர்த்தும் வருகிறது. ஆனாலும், இயல்பை விட இதுவரை குறைவான அளவு மழைதான் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், மழையளவு அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நவம்பர் 26ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

Chennai Meteorological Centre, Rain Announcement

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 27ஆம் தேதியன்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் நிலவக் கூடும். இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து 29ஆம் தேதி காற்றழுத்த மண்டலமாக வலுப்பெறக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று 24ம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரையிலான 7 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், நவம்பர் 25ஆம் தேதி (நாளை) செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Meteorological Centre, Rain Announcement

சென்னையில் இன்று ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil