சென்னை - விசாரணைக்கு வந்த போது கூட மாஸ்க் இல்லாமல் வந்த அடாவடி பெண்மணி

சென்னை - விசாரணைக்கு வந்த போது கூட மாஸ்க் இல்லாமல் வந்த அடாவடி பெண்மணி
X

மிரட்டிய பெண் வழக்குறைஞர் தனுஜா கத்துலா

விசாரணைக்கு வந்த போது கூட மாஸ்க் இல்லாமல் வந்த அடாவடி பெண்மணிக்கு நம்ம சென்னை போலீஸ் கொடுக்கும் மரியாதை வியக்க வைக்கிறது

விசாரணைக்கு வந்த போது கூட மாஸ்க் இல்லாமல் வந்த அடாவடி பெண்மணிக்கு நம்ம @chennaipolice_ கொடுக்கும் மரியாதை வியக்க வைக்கிறது

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசுஆணைப்படி ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்துவருகிறது. அரசு வழிகாட்டுதல்களை மீறி வெளியேவருபவர்களின் வாகனங்களை சோதனை செய்து உரியஅனுமதி இல்லாமல் செல்பவர்கள் மீது சட்டபடிநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக 560 இடங்களில் வாகன தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டுகாவல் அதிகாரிகள் கொண்ட குழுவினர்கள் தணிக்கைசெய்து வருகின்றனர்.

முகக்கவசம் அணியாமல் சென்ற தனது மகளுக்கு போலீசார் அபராதம் விதித்ததால் பெண் வழக்கறிஞர் ஒருவர் போலீசாரை கடுமையாக பேசும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. தெலைக்காட்சி பத்திரிக்கைகள் என அனைத்திலும் செய்தி வீடியோ வெளியானது.சேத்துபட்டு சிக்னலில் சென்னை போக்குவரத்து காவலர்கள் ஊரடங்கு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை போலீஸார் வழிமறித்துள்ளனர். காரில் இருந்த பெண் முகக்கவசம் அணியாமல் இருந்துள்ளார். இதன்காரணமாக ரூ.500 அபராதம் விதிக்கவுள்ளதாக போக்குவரத்து போலீஸார் அந்தப்பெண்ணிடம் கூறியுள்ளனர்.

இதனைக்கேட்டு ஆத்திரமடைந்த அந்தப்பெண் தனது அம்மாவுக்கு போன் செய்து விஷயத்தை கூறியுள்ளார். விலையுயர்ந்த காரில் சம்பவ இடத்துக்கு வந்த அந்தப்பெண்ணின் தாயார் அங்கு நடந்தவற்றை எதுவும் விசாரிக்காமல் போக்குவரத்து போலீஸாரை நோக்கி கடுமையான வார்த்தைகளால் பேசத்தொடங்கினார். தான் ஒரு வழக்கறிஞர் என்னால் அபராதம் கட்ட இயலாது என போலீஸாரிடம் வாக்குவாதம் செய்தார்.

நான் அட்வகேட்.. மவனே உன் யூனிபார்ம் கழட்டிடுவேன்.. என ஊரடங்கு பணிகளில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர்களுடன் வாக்குவாதம் செய்தார்.மிரட்டிய பெண் வழக்குறைஞர் தனுஜா கத்துலா, க/பெ.பழனிவேல் ராஜன், கீழ்பாக்கத்தைசேர்ந்தவர் என விசாரணையில் தெரியவந்தது. இது குறித்துசம்மந்தப்பட்ட போக்குவரத்து காவலர், சேத்துப்பட்டுகாவல் ஆய்வாளரிடம் கொடுத்த புகாரின் பேரில்மேற்படி தனுஜா கத்துலா மீது 269, 270, 290, 353, 294 (b)506 (i) இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் படிவழக்குப்பதிவு செய்து விசாரணை நடை பெற்று போலீசாரை ஒருமையில் பேசியதால் அவர் மீது கொலை மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.


https://www.facebook.com/107274788081681/posts/164147829061043/

இதற்கான விசாரணைக்கு சம்மன் அனுப்பப்பட்டது. விசாரணைக்கு வந்த போது கூட மாஸ்க் இல்லாமல் வந்த அடாவடி பெண்மணிக்கு நம்ம @chennaipolice_ கொடுக்கும் மரியாதை வியக்க வைக்கிறது. சென்னை மாநகர காவல்துறைக்கு ஒரு சிரம் தாழ்ந்த வணக்கம்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!