/* */

லுக் அவுட் நோட்டீஸில் சிக்கிய 3 ஆண்டு தலைமறைவு குற்றவாளி

3 ஆண்டு தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

லுக் அவுட் நோட்டீஸில் சிக்கிய 3 ஆண்டு தலைமறைவு குற்றவாளி
X

துபாயில் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ராமநாதபுரத்தை சோ்ந்த கொலை குற்றவாளி சிறப்பு விமானத்தில் துபாயிலிருந்து வந்தபோது, சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். குடியுரிமை அதிகாரிகள் சோதனையில் அவரை கண்டுப்பிடித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சோ்ந்தவா் ராஜா(50).இவா் எலட்ரிக்கல் வேலை செய்து கொண்டிருந்தாா்.கடந்த 2018 ஆம் ஆண்டில் அங்கு நடந்த கோஷ்டி மோதலில் ஒருவா் அடித்து கொலை செய்யப்பட்டாா். அந்த கொலை வழக்கில் ராஜா முக்கிய குற்றவாளி ஆவார். இதையடுத்து தொண்டி போலீசாா் கொலை வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்ய தேடினா். ஆனால், ராஜா போலீசிடம் சிக்காமல் தலைமறைவாகிவிட்டாா். அதோடு அவா் வெளிநாட்டிற்கும் தப்பியோடி விட்டதும் தெரிய வந்தது.

இதையடுத்து ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு ராஜாவை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தாா். அதோடு அனைத்து சா்வதேச விமானநிலையங்களுக்கும் தகவல் கொடுத்து லுக் அவுட் சர்குலர் எனப்படும் LOC போட்டு வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் துபாயிலிருந்து ஃபிளை துபாய் சிறப்பு விமானம் இன்று அதிகாலை சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போா்ட் ஆவணங்களை விமானநிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனையிட்டனா்.

இந்த விமானத்தில் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கும் கொலை குற்றவாளி ராஜாவும் வந்தாா். அவருடைய பாஸ்போா்ட்டை கம்யூட்டரில் பரிசோதித்தபோது,தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்று தெரியவந்தது. இதையடுத்து ராஜாவை குடியுரிமை அதிகாரிகள் வெளியில் விடாமல் மடக்கிப்பிடித்து,குடியுரிமை அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் அடைத்து வைத்துள்ளனா். அதோடு ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டுக்கு 3 ஆண்டு தலைமறைவு கொலை குற்றவாளி, துபாயிலிருந்து வந்தபோது, சிக்கியுள்ளாா் என்று அவசர தகவல் கொடுத்தனா்.

இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட தனிப்படை போலீசாா்,ராஜாவை கைது செய்யசென்னை விமானநிலையம் வந்து கொண்டிருக்கின்றனா்.

Updated On: 8 April 2021 4:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?