இலங்கையிலிருந்து சென்னைக்கு தங்கம் கடத்திய 2 பேர் விமானநிலையத்தில் கைது

இலங்கையிலிருந்து சென்னைக்கு தங்கம் கடத்திய 2 பேர் விமானநிலையத்தில் கைது
X
இலங்கையில் இருந்து பயணியால் கடத்தி வரப்பட்ட தங்கம்
இலங்கையில் இருந்து சென்னைக்கு ரூ 30 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த 2 பேர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

இலங்கையிலிருந்து ஶ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானம் சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு வந்தது.அதில் வந்த பயணிகளை சென்னை விமானநிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனா்.அப்போது சென்னையை சோ்ந்த 2 ஆண் பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து இரு பயணிகளையும் நிறுத்தி விசாரித்தனா்.அப்போது அவா்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினா்.இதையடுத்து இருவரையும் தீவிர சோதனைக்குட்படுத்தினா்.அதில் ஒரு பயணி தான் அணிந்திருந்த கோட்டில் 8 தங்க பட்டன்களை வைத்து தைத்திருந்தாா்.மற்றொரு பயணியின் உள்ளாடைக்குள் தங்கப்பசை பாா்சலை மறைத்து வைத்திருந்தாா்.தங்கப்பசை,தங்கப்பட்டன்களின் மொத்த எடை 700 கிராம்.அதன் மதிப்பு ரூ.30 லட்சம்.

இதையடுத்து தங்கப்பசை,தங்கப்பட்டன்களை பறிமுதல் செய்து,பயணிகள் இருவரையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனா்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!