திருக்கழுக்குன்றம் அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவர்கள் இருவர் பலி

திருக்கழுக்குன்றம் அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவர்கள் இருவர் பலி
X

இறந்த மாணவனின் உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவர்கள் இருவர் பலியானார்கள்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த மேலப்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் குமார் கூலித்தொழிலாளி. இவரது மகன் சுகேசன் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தான். இவரும் அதே பகுதியை சேர்ந்த மணி என்பவரின் பேரன் சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவரது மகன் இளங்கோ பத்தாம் வகுப்பு படித்து வந்தான்.

தேர்தல் விடுமுறை என்பதால் திருக்கழுக்குன்றம் அடுத்த மேலப்பட்டு கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில் இளங்கோவன் மற்றும் சுகேசன் ஆகிய இருவரும் கிணற்றிற்கு குளிக்க சென்றுள்ளனர்.

நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்து கிணற்றில் சென்று பார்த்தபோது இருவரும் நீரில் மூழ்கி பலியாகியிருந்தனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!