திருப்போரூர் காவல்நிலைய பெண் காவலர் தற்கொலை முயற்சி!

திருப்போரூர் காவல்நிலைய  பெண் காவலர் தற்கொலை முயற்சி!
X
தற்கொலைக்கு முயன்ற காவலர் கஜலட்சுமி
திருப்போரூர் காவல்நிலைய பெண் காவலர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து செய்து கொள்ள முயன்றார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் காவல் நிலையத்தில் கஜலட்சுமி (வயது 23) என்பவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காவலராக பணிபுரிந்து வருகின்றார். ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த கஜலட்சுமியின் தாய் தந்தை இருவருக்கும் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருப்போரூர் போலீஸ் பெண் காவலர் குடியிருப்பில் தங்கி கஜலட்சுமி தங்கி பணியாற்றி வருகிறார். இந்தநிலையில், விடுதியில் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயங்கிய நிலையில் கிடந்த இவரைக் கண்ட சக காவலர்கள், திருப்போரூர் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு மருத்துவர்கள் முதலுதவி செய்து கஜலட்சுமியை காப்பாற்றியுள்ளனர். சில மாதங்களாகவே திருப்போரூர் காவல் ஆய்வாளர் கஜலட்சுமி தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. காவலர் கஜலட்சுமியை தகாத வார்த்தைகளால் ஒருமையில் பேசியதாகவும், இதனாலேயே அவர் தற்கொலைக்கு முயற்தாகவும் கூறப்படுகிறது.

இதே போன்று அனைத்து போலீசாருக்கும் தொல்லை கொடுத்ததாக தெரியவருகிறது. சக காவலர்கள் வெளியே சொல்ல முடியாமல் குமுறுகின்றனர். சிலர் செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பியிடம் தகவல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. திருப்போரூர் காவல்நிலையத்தில் முதன்முறையாக பணியில் இருக்கும் பெண் காவலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டச்சம்பவம் திருப்போரூர் பொதுமக்களிடையே பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!