திருக்கழுக்குன்றம் அருகே காரில் கடத்தி வந்த போதை புகையிலை பறிமுதல்

திருக்கழுக்குன்றம் அருகே காரில் கடத்தி வந்த  போதை  புகையிலை   பறிமுதல்
X

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் அருகே போதை புகையிவை கடத்தி வந்தபோது போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட கார்.

திருக்கழுக்குன்றம் அருகே காரில் கடத்தி வந்த ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள போதை புகையிலை மற்றும் கார் பறிமுதல்

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்திமங்கலம் கூட்ரோடு பகுதியில் திருக்கழுக்குன்றம் காவல் ஆய்வாளர் ரவிகுமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்,

அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஒரு காரை போலீசார் நிறுத்தினர். போலீசாரைப் பார்த்ததும் அந்தக் கார் நிற்காமல் சென்றது. உடனே போலீசார் அந்தக் காரை விரட்டிச்சென்று மடக்கி பிடித்து சோதனையிட்டதில், அந்த காரில் மறைத்து கடத்தி வந்த 150 கிலோ எடை கொண்ட போதை புகையில் பாக்கெட்டுகளை போலீசார் கைப்பற்றினர்.

இதன் மதிப்பு ரூ.60 ஆயிரமாகும், இது சம்பந்தமாக திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த ராஜா(37 ) என்பவரை கைது செய்ததுடன், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து குட்கா பொருட்களை கடத்தி வந்த ராஜா என்பவர் மீது, திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்