பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
X

திருப்போரூர் பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது

பெட்ரோல் டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும்,நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் இராவணன் பேசும் போது, மத்திய அரசு மக்களுக்கான அரசாக இல்லாமல் அம்பானிக்கும் அதானிக்கும் பணநாயகம் அரசாக செயல்படுவகிறது. சமையல் எரிவாயு மூலம் ஆண்டு ஒன்றுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு எடுத்துக் கொண்டுள்ளது, மத்திய பாஜக அரசு ஆட்சிக்கு வந்து 7 ஆண்டுகளில் மொத்தமாக 28 லட்சம் கோடி ரூபாய் மொத்தமாக கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்து விலை வாசிகளும் உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது, இது மக்களை ஏமாற்றும் ஒரு செயலாக உள்ளது. எனவே மத்திய அரசும் மாநில அரசும் ஒட்டுமொத்தமான தமிழ் மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!