ஞாயிறு முழு ஊரடங்கினால் பார்வையாளர்கள் இல்லாமல் முடங்கியது மாமல்லபுரம்

ஞாயிறு முழு ஊரடங்கினால் பார்வையாளர்கள் இல்லாமல் முடங்கியது மாமல்லபுரம்
X

முழு ஊரடங்கினால் வெறிச்சோடி காணப்படும் மாமல்லபுரம்.

ஞாயிறு முழு ஊரடங்கினால் பார்வையாளர்கள் இல்லாமல் சுற்றுலா தலமான மாமல்லபுரம் முடங்கியது.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுபடுத்த ஞாயிறு ஒரு நாள் முழு ஊரடங்கு இன்று கடை பிடிக்கப்பட்டது. இதனால், மாமல்லபுரத்தில் மக்கள் நடமாட்டம் இன்றி முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. உலக சுற்றுலா தலங்களில் புகழ் பெற்ற சுற்றுலா தலமாக மாமல்லபுரம் திகழ்ந்து வருகிறது. இதனால் இப்பகுதியில் அதிகளவில் கூட்டம் காணப்படும்.

இந்நிலையில், கொரோனா தொற்று நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதேப்போல், தமிழகத்திலும் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 2800ஐ கடந்துவிட்டது.

இதனை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், ஞாயிற்றுக்கிழமையான இன்று ஒரு நாள் மட்டும் மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து மாமல்லபுரத்தில் வெளியூர்களை சேர்ந்த சுற்றுலா வாசிகள் வர தடைவிதிக்கப்பட்டது. பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. இதனைத் தொடர்ந்து மாமல்லபுரத்தில் அரசு பேருந்து, தனியார் வேன், ஆட்டோக்கள், கடைகள் எதுவும் இயங்கவில்லை. மேலும் ஓட்டல், ரெஸ்டாரண்ட், லாட்ஜ், தங்கும் விடுதிகள், காய்கறி கடைகள், இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட் அனைத்தும் மூடப்பட்டது. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்கள் மட்டுமே செயல்பட்டது.

இந்நிலையில், வெண்ணெய் உருண்டைபாறை, அர்ச்சுணன் தபசு, ஐந்து ரதம், கோவளம் செல்லும் சாலை, கடற்கரை கோயிலுக்கு செல்லும் சாலை, திருக்கழுக்குன்றம் சாலை, ஒத்த வாடை தெரு, அண்ணாநகர், கங்கைகொண்டான் மண்டபம் தெரு, கலங்கரை விளக்கம் சாலை, மாட வீதி, பேருந்து நிலையம், கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை, பூஞ்சேரி கூட்ரோடு உள்ளிட்ட இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டது

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!