மாமல்லபுரம் அருகே நாய்கள் கடித்ததில் மான் உயிரிழப்பு

மாமல்லபுரம் அருகே நாய்கள்  கடித்ததில் மான் உயிரிழப்பு
X

மாமல்லபுரம் அருகே நாய்கள் கடித்ததில் மான் உயிரிழப்பு

மாமல்லபுரம் அருகே வழி தவறி வந்த மானை நாய்கள் கடித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே குழிப்பாந்தண்டத்தில் இன்று அங்குள்ள வயலில் எச்சூர் காட்டில் இருந்து வழி தவறி வந்த புள்ளி மான் ஒன்று புற்களை தின்று கொண்டிருந்தது. அப்போது வயல்வெளியில் இருந்த நாய்கள் மானை தாக்கி கடித்து குதறியது. அப்போது வயல்வெளிக்கு சென்று கொண்டிருந்த சிலர் நாய்களை அடித்து விரட்டினர். புள்ளி மானின் பின்பகுதியில் நாய்கள் கடித்து குதறியதால் ரத்தம் பீறிட்ட நிலையில் மான் அந்த இடத்திலேயே துடிதுடித்து இறந்துவிட்டது.

தகவல் அறிந்து திருப்போரூர் வனத்துறை அலுவலர்கள் வந்து மானை மீட்டு பிரேத பரிசோதனை செய்து திருப்போரூர் காட்டில் மானை புதைத்தனர். கடித்தது நாய்களா அல்லது குள்ளநரியா என ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!