திருப்போரூர் ஒன்றியத்தில் நாளை 36 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

திருப்போரூர் ஒன்றியத்தில் நாளை 36 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
X

பைல் படம்.

திருப்போரூர் ஒன்றியத்தில் நாளை 36 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்களின் விபரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்றை கட்டுபடுத்த நாளை (12 ம் தேதி) நடக்கும் சிறப்பு முகாமில் அனைவரும் பங்கேற்று பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி தடுப்பூசி போட்டுக்கொள்ள ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருப்போரூர் ஒன்றியத்தில் 67 சதவீதம் மக்கள் தடுப்பூசி போடாமல் உள்ளனர். நாளை நடக்கும் முகாமில் 100 சதவீத தடுப்பூசி போட செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.

மேலும் திருப்போரூர் ஒன்றியத்தில் நாளை காலை, மாலை என இரு பிரிவுகளாக பிரித்து தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன. காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை 36 இடங்களில் இந்த முகாம் நடைபெறும்.

காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை கொரொனா தடுப்பூசி முகாம்கள் நடக்கும் இடங்கள்:

செம்பாக்கம் ஊராட்சி:

கொட்டமேடு, கரும்பாக்கம் சமுதாய கூடம், செம்பாக்கம் சமுதாய கூடம், வெம்பேடு சமுதாய கூடம், செங்காடு சமுதாய கூடம், நெம்மேலி பள்ளி, திருவிடந்தை திரௌபதி அம்மன் கோயில், கனகப்பட்டு பள்ளி, திருப்போரூர் முருகன் கோயில், தண்டலம் பி.யூ பள்ளி, சிறுதாவூர் பஞ்சாயத்து அலுவலகம், சுலேரிக்காடு ஐசிடிஎஸ், பையூர் பஞ்சாயத்து அலுவலகம், பையனூர் பஞ்சாயத்து அலுவலகம்.

மானாமதி ஊராட்சி:

அருங்குன்றம் ஈ சேவை மையம், ஒரகடம் ஐசிடிஎஸ், தண்டரை சின்ன இரும்பேடு மாரியம்மன் கோயில், மானாமதி இ சேவை மையம்.

கேளம்பாக்கம் ஊராட்சி:

மாம்பாக்கம் பஞ்சாயத்து அலுவலகம், பொன்மார் பஞ்சாயத்து அலுவலகம், கரிகட்டுகுப்பம் கானத்தூர் ஐசிடிஎஸ், ஏகாட்டூர் களிப்பட்டூர், நாவலூர், புதுப்பாக்கம் ஏபிஜே சமுதாயக்கூடம், குளத்தூர் சமுதாயக்கூடம், கோவளம் பஞ்சாயத்து அலுவலகம், கேளம்பாக்கம் சமுதாய கூடம், கேளம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம்.

சிறுகுன்றம் ஊராட்சி:

அனுமந்தபுரம் பள்ளி, நெல்லிக்குப்பம் பஞ்சாயத்து அலுவலகம், முள்ளிபக்கம் சின்ன விப்பேடு பஞ்சாயத்து அலுவலகம், செங்குன்றம் இ சேவை மையம், சிறுகுன்றம் ஆரம்ப சுகாதார நிலையம்.

பிற்பகல் 2 மணி முதல் மாலை 7 மணி வரை கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள்:

செம்பாக்கம் ஊராட்சி:

கோட்டமேடு இ சேவை மையம், மடையத்தூர் இ சேவை மையம், காயார் சமுதாயக்கூடம், செங்காடு நூலகம், வட நெம்மேலி பள்ளி, திருவிடந்தை திரௌபதி அம்மன் கோயில், துகார் அடுக்குமாடி குடியிருப்பு, திருப்போரூர் முருகன் கோயில், ஆலத்தூர் நடுநிலைப்பள்ளி, சிறுதாவூர் பஞ்சாயத்து அலுவலகம், பட்டிபுலம் இ சேவை மையம், தையூர் புதிய காலனி மேல்நிலைப்பள்ளி, ஆமூர் பொருந்தவாக்கம் ஐசிடிஎஸ், செம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம்.

மானாமதி ஊராட்சி:

பஞ்சந்திருத்தி பள்ளி, எம்ஜிஆர் நகர் ஐசிடிஎஸ், ஒரகடம் ஆரம்ப சுகாதார நிலையம், பெரிய இரும்பேடு மானாமதி ஆரம்ப சுகாதார நிலையம்.

கேளம்பாக்கம் ஊராட்சி:

மேலக்கோட்டையூர் பஞ்சாயத்து அலுவலகம், சோனலூர் இ சேவை மையம், கரிகாட்டுகுப்பம் கானாத்தூர் ஐசிடிஎஸ், ஏகாட்டூர் கள்ளிப்பட்டூர், படூர் இ சேவை மையம், சிறுசேரி சமுதாயக்கூடம், புதுப்பாக்கம் ஏபிஜே சமுதாயக்கூடம், பனங்காட்டுபாக்கம் பஞ்சாயத்து அலுவலகம், கேளம்பாக்கம் சமுதாய கூடம், கேளம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம்.

சிறுகுன்றம் ஊராட்சி:

பெருந்தண்டலம் ஐசிடிஎஸ், கீழூர் பஞ்சாயத்து அலுவலகம், முள்ளிபக்கம் பஞ்சாயத்து அலுவலகம், வெங்கூர் பள்ளி, ஆகிய இடங்களில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 7 மணி வரை கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடக்கும் இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!