மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி பகுதியில் கலெக்டர் ராகுல்நாத் ஆய்வு

மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி பகுதியில் கலெக்டர் ராகுல்நாத் ஆய்வு
X

மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர். 

மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி பகுதியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் ஆய்வு மேற்கொண்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் உள்ள நரிக்குறவர் பகுதியில், 20 இருளர் குடும்பமும் 50 க்கும் மேற்பட்ட நரிக்குறவர்களும் வசித்து வருகின்றனர். இரண்டு மாதங்களுக்கு முன்னர், தமிழக முதல்வர் ஸ்டாலின், இவர்களுக்கு வீட்டு மனை பட்டா உள்ளிட்ட ஆவணங்களை நேரில் வழங்கினார்.

இருளர் மக்களுக்கும், நரிக்குறவர் மக்களுக்கும் இருக்க கூடிய பழக்க வழக்கங்கள் மாறுதலாக உள்ள நிலையில், அடிக்கடி இரண்டு தரப்பினருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. இதனிடையே, நரிக்குறவர் பெண்ணான அஸ்வினி, எங்களுக்கு முதல்வர் வழங்கிய பட்டா தேவை இல்லை. நாங்கள் வருவாய் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்போவதாக தகவல் வந்தது. இதை அடுத்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் நேரில் சென்று ஆய்வு செய்து, இரு தரப்பு மக்களையும் அழைத்து பேசி அவர்களின் பிரச்சினையை தீர்த்து வைத்தார்.

Tags

Next Story
ai in future agriculture