செங்கல்பட்டு: ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் இளைஞர்கள்-குவியும் பாராட்டு!
திருக்கழுகுன்றத்தில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் இளைஞர்கள்.
கொரோனா இரண்டாவது அலையின் வீச்சும், வேகமும் முதல் அலையை காட்டிலும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல், அன்றாட சமையலுக்கு தேவையான பொருட்களை கூட வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தங்க இடமின்றி சாலையோரங்களில் வசித்து வருபவர்களின் நிலை மிகவும் மோசமடைந்து உள்ளது.
திருக்கழுக்குன்றம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ரோட்டில் வசித்து கொண்டிருக்கும் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்களின் துயரங்களை துடைப்பதற்காக, பொன்விளைந்த களத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் சார்பில் நாள்தோறும் மதியம் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
தக்காளி சாதம், பிரிஞ்சி சாதம், முட்டை, தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை இளைஞர்கள் ஒன்று சேர்ந்து இந்த சேவையினை செய்து வருகின்றனர். இளைஞர்கள் தினந்தோறும் வருகை தந்து, ஆதரவற்றவர்களின் துயரங்களை துடைக்கும் சேவையில் ஈடுபடும் நிகழ்வு அனைவராலும் பாராட்டும் படி அமைந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu