/* */

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிமுக நிவாரணம் வழங்கல்

திருக்கழுக்குன்றம் அருகே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருளர் இன மக்களுக்கு அதிமுக சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிமுக நிவாரணம் வழங்கல்
X

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக மாணவரணி சார்பில் உணவு வழங்கப்படுகிறது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் இருளர் இன மக்கள் மற்றும் நரிக்குறவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து உணவிற்கு வழியின்றி தவித்து வருகின்றனர்.

அவர்களுக்கு செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் திருக்கழுக்குன்றம் மேற்கு ஒன்றிய அதிமுக மாணவரணி சார்பில் தினந்தோறும் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இன்று திருக்கழுக்குன்றம் அடுத்த சாலூர் ராமாபுரம் பகுதியில் வசித்து வரும் சுமார் நூறு குடும்பங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட இருளர் இன மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சி செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. சாலூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜானகிராமன் முன்னிலை வகித்தார். திருக்கழுக்குன்றம் மேற்கு ஒன்றிய மாணவரணி அமைப்பாளர்கள் சுரேஷ், ராமச்சந்திரன், சதீஷ், விக்னேஷ் ஆகியோர் அறுசுவை உணவுகள் வழங்கி வழங்கினர்.இதில் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி செயளாலர் தினேஷ்குமார்,தரணிதாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Updated On: 10 Nov 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  3. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  4. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  5. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  6. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  7. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  8. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  10. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்