தையூர் ஒன்றிய கவுன்சிலர் அதிமுக வேட்பாளர் நந்தினி நரேஷ் குமார் வாக்கு சேகரிப்பு

தையூர் ஒன்றிய கவுன்சிலர் அதிமுக வேட்பாளர்  நந்தினி நரேஷ் குமார் வாக்கு சேகரிப்பு
X

தையூர் ஊராட்சியில் வாக்கு சேகரிக்கும் அதிமுக வேட்பாளர்  நந்தினி நரேஷ் குமார்

தையூர் ஒன்றிய கவுன்சிலர் அதிமுக வேட்பாளர் நந்தினி நரேஷ் குமார் தையூர் ஊராட்சியில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேரூராட்சியில் அதிமுக சார்பில் ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளராக போட்டியிடும் நந்தினி நரேஷ் குமார் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு கோவில் மனை தெருவில் பொதுமக்களிடையே கட்சி ஆதரவாளர்களுடன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.

மேலும் பொதுமக்களுக்கு சால்வை அணிவித்து நோட்டீஸ் வழங்கி பல்வேறு நிகழ்வுகளை கூறி, ஒன்றிய குழு உறுப்பினராக வெற்றி பெற வைத்தால் உங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் உடனடியாக செய்து கொடுப்பேன் என வாக்குறுதி கூறினார்.

உடன் தையூர் பர்வேஷ் மாலிக், சீமோன், தையூர் கோவில் மானியம் கிளைக் கழகச் செயலாளர் கங்காதரன், பெரிய பில்லெரி அருள், கோவில்மனை விஜி , கோவில் மானியம் வினோத்குமார், கேலி உடன் ஏராளமானோர் கட்சித் தொண்டர்கள் மற்றும் மகளிர் அணி உட்பட கலந்து கொண்டு மக்களின் வாக்கு சேகரித்தனர்,

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு