தமிழக காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டி

தமிழக காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டி
X

துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றிப் பெற்ற தலைமை மண்டல அணி, திருச்சி மத்திய மண்டல அணி

தமிழக காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டியில் தலைமை மண்டல அணியும், மத்திய மண்டல அணியும் சாம்பியன் பட்டத்தை பிடித்தது.

செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கம் துப்பாக்கி சுடும் தளத்தில் தமிழக காவல்துறை மண்டல அளவிலான வருடாந்திர துப்பாக்கி சுடும் போட்டி, 8ம் தேதி நடைபெற்றது.இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் என 250-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

மண்டலங்களுக்கு இடையே நடந்த போட்டியில், ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை, சம அளவில் புள்ளிகள் பெற்ற தலைமை மண்டல அணியும், மத்திய மண்டல அணியும் பங்கிட்டு கொண்டன.இரண்டாவது இடத்தை தெற்கு மண்டல அணியும், மூன்றாவது இடத்தை ஆயுதப்படை அணியும் பெற்றன.

இதில், தமிழக காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு கேடயங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.

Tags

Next Story
ai in future agriculture