கொலை செய்து தலையை சா்ச் வாசலில் வீசி விட்டு தலைமறைவான கொலையாளிகள்

கொலை செய்து  தலையை சா்ச் வாசலில் வீசி விட்டு தலைமறைவான கொலையாளிகள்
X

கொலை செய்யப்பட்டவர் தலை மட்டும் கிடந்த தேவாலய நுழைவாயில்

தாம்பரம் அருகே வாலிபரை கொலை செய்து, தலையை சா்ச் வாசலில் வீசி விட்டு, உடலை எடுத்துக்கொண்டு தலைமறைவான கொலையாளிகள்.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே எருமையூரில் உள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயம் வாசலில் நேற்று இரவு 10 மணியளவில், ஒரு மனித தலை மட்டும் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. இதைப்பாா்த்த அப்பகுதி மக்கள் அதிா்ச்சியடைந்து உடனடியாக சோமங்கலம் போலீசுக்கு தகவல் கொடுத்தனா்.

இதையடுத்து போலீசாா் விரைந்து வந்து அந்த தலையை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா். அப்போது அதே பகுதியில் உள்ள கிறிஸ்துராஜா கோவில் தெருவில் வசிக்கும் விசுவாசம் என்பவரின் மகன் சச்சின்(21) என்பவரின் தலை என்று தெரியவந்தது.ஆனால் தலை மட்டும் அந்த இடத்தில் ரத்தம் வடிந்த நிலையில் கிடந்ததே தவிர,உடலை காணவில்லை. இதையடுத்து போலீசாா் உடலை தேடிக்கொண்டிருக்கின்றனா். இதுவரை உடல் கிடைக்கவில்லை.

இதே தேவாலய வாசலில் கடந்த ஆண்டு அக்டோபா் 21 ஆம் தேதி அபிஷேக் என்ற கல்லூரி மாணவா் ஒருவா் வெட்டி கொலை செய்யப்பட்டாா். அந்த கொலையில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளியான சச்சின் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியில் வந்திருந்தாா். எனவே பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீசாா் கருதுகின்றனா்.

மேலும் மீதமுள்ள தலையில்லா உடலை கொலையாளிகள் எங்கு வீசி சென்றனர்? என்று போலீசார் தேடி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து ஏரளாமான போலீசார் பாதுக்காப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!