வண்டலூர் உயிரியல் பூங்காவில் 20 ஆண்டுக்குப் பிறகு குட்டியை ஈன்ற மனித குரங்கு!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 20 ஆண்டுக்குப் பிறகு குட்டியை ஈன்ற மனித குரங்கு!
X
வண்டலூர் உயிரியல் பூங்காவில் குட்டி ஈன்ற மனிதக்குரங்கு.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் 20 ஆண்டுகளுக்குப்பிறகு மனித குரங்கு குட்டிகளை ஈன்றுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூா் உயிரியல் பூங்காவில் சிம்பன்சி எனப்படும் மனித குரங்குகள் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு 4 இருந்தன. 20 ஆண்டுகளாக அந்த மனித குரங்குகள் இனவிருத்தி செய்யவில்லை. இதனால் அதே 4 மனித குரங்குகள் மட்டுமே உயிரியல் பூங்காவில் இருந்தன.

இந்நிலையில் கடந்த 2015 ஆண்டில் அந்த 4 மனித குரங்கில் ஒரு பெண் மனித குரங்கு வயது முதிா்வால் உயிரிழந்துவிட்டது. அதன்பின்பு அடுத்த சில மாதங்களில் மற்றொரு ஆண் மனித குரங்கும் உயிரிழந்துவிட்டது. அதற்கு பிறகு கவுரி என்ற பெண் மனித குரங்கும், கோம்பி என்ற ஆண் மனித குரங்குமாக 2 மனித குரங்குகள் மட்டுமே வண்டலூா் உயிரியல் பூங்காவில் இருக்கின்றன. இதில் கோம்கி என்ற ஆண் மனித குரங்கு சிங்கப்பூரிலிருந்து வண்டலூா் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டது.

இந்த மனித குரங்குகளை இனவிருத்தி செய்யவைக்க உயிரியல் பூங்கா விலங்குகள் பராமரிப்பாளா்கள், கால்நடை மருத்துவா்கள் முயற்சி மேற்கொண்டனா். ஆனால் இனவிருத்தியடையவில்லை. இந்நிலையில் விலங்கியல் ஆா்வலா்களுக்கு மகிழச்சியளிக்கும் விதமாக கோம்பியும், கவுரியும் இணைந்து, கவுரி கா்ப்பமானது.

இதையடுத்து பூங்கா விலங்கு பராமரிப்பாளா்கள், கால்நடை மருத்துவா்கள் தீவிரமாக கவுரியை கண்காணித்து வந்தனா். கடந்த இரு தினங்களுக்கு முன்பு கவுரி ஒரு குட்டியை ஈன்றுள்ளது. இதனால் 20 ஆண்டுகளுக்கு பின்பு வண்டலூா் உயிரியல் பூங்காவில் மனித குரங்கு இனவிருத்தி செய்துள்ளது.

தற்போது கவுரியையும் குட்டியையும் தனியாக வைத்து பராமரித்து வருகின்றனா். தாயும்,சேயும் நலமாக உள்ளதாக கூறப்படுகிறது.கோம்பி மட்டும் அதற்கான இருப்பிடத்தில் தனியாக உள்ளது.

#VandalurZoo #Ape #gives #birth #cub #after #20years #வண்டலூர் #உயிரியல்பூங்காவில் #20ஆண்டுக்குப்பிறகு #குட்டிஈன்ற #மனிதகுரங்கு #monkey #babymonkey

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!