தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் புயல் நிவாரண உதவிகள் அளிப்பு
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கு. தியாகராஜன் தலைமையில் நிரவாண உதவிகள் வழங்கினர்
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கு. தியாகராஜன் தலைமையில் நிரவாண உதவிகள் வழங்கினர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை துறை அமைச்சர் ஆகியோரது வழிகாட்டலில் படி,மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட அன்னை அஞ்சுகம் நகரில் செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக சுமார் 160 மாணவர்களுக்குத் தேவையான புத்தகப்பை, பேனா, நோட்டுபுத்தகங்கள், பென்சில், ஸ்கேல் உள்ளிட்ட படிப்புக்கு தேவையான பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது.
இரண்டு நாட்களுக்கு முன் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இப்பகுதியில் உணவு வழங்க தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க நிர்வாகிகளுடன் சென்ற போது, மாணவர்கள் தங்களுடைய புத்தகப்பை மற்றும் நோட்டு புத்தகங்கள் அனைத்தும் வெள்ள நீரில் அடித்து விட்டு சென்றதாகவும், எங்களுக்கு நோட்டு புத்தகங்கள், புத்தகப் பை பேனா பென்சில் ஸ்கேல் உள்ளிட்ட உபகரணங்களை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
அந்தப் பகுதி மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று இன்று நடைபெற்ற நிகழ்வுக்கு மாநிலத் தலைவர் தியாகராஜன் தலைமை வகித்து அனைத்து, மாணவர்களுக்கும் நோட்டு புத்தகங்கள் புத்தகத்தை போன்றவற்றை வழங்கினார்.
இந்நிகழ்வில் மாநில செயலாளர் தி.அருள்குமார் மாநில பொருளாளர் உதயகுமார் மாநில மகளிர் அணி செயலாளர் வந்தனா மாநில மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் பேகம் மாநில துணைசெயலாளர் செங்கல்பட்டு மாவட்ட பொருளாளர் கந்தன், துணைத் தலைவர் டெல்லி பாபு,
காஞ்சிபுரம் மாவட்ட செய்தித் தொடர்பாளர் வெங்கடபதி, காஞ்சிபுரம் மாவட்ட சட்ட ஆலோசகர் கொலுவானந்தம் திருச்சி மாவட்ட பொறுப்பாளர் பூபாலன், விஜயகுமார் , ராஜா, கிருஷ்ணமூர்த்தி காஞ்சிபுரம் மாவட்டப் பொறுப்பாளர் மார்டின்,சங்கர் செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பாளர் சத்திதானம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்களிடம் மாநில தலைவர் தியாகராஜன் பேசியதாவது: எப்பொழுதெல்லாம் பேரிடர்கள் தமிழகத்தில் வருகிறதோ அப்போதெல்லாம் முதல் சங்கமாக மக்களோடு மக்களாக களத்தில் நிற்கிறது தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட கஜா புயல், வர்தா புயல், ஒக்கி புயல், சென்னை வெள்ளம், நீலகிரி வெள்ளம், கொரோனா பேரிடர் காலம் போன்றவற்றில் முதல் சங்கமாக களத்தில் இறங்கி மக்களோடு மக்களாக நின்று, பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவியதோடு எங்களுடைய ஒரு நாள் ஊதியத்தை வழங்கி அதோடு கூட பேரிடர்களிலும் களத்திலே நின்று களப்பணி ஆற்றி இருக்கிறோம்.
அதேபோல தற்போது மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எங்களால் ஆன உணவு, குடிநீர் பிஸ்கெட் வழங்குவது உள்ளிட்ட உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறோம். தற்போது கூடதமிழ்நாடு முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று எங்களுடைய ஒரு நாள் ஊதியத்தை மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்காக வழங்க இருக்கிறோம். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து எங்களால் ஆன உதவிகளை செய்வோம்.
நாங்கள் சில தினங்களுக்கு முன்பாக கடுமையான மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்த பகுதிக்கு உணவு கொண்டு வந்த போது மாணவர்கள் எங்களுக்கு புத்தகப்பை நோட்டு பேனா புத்தகம் அனைத்தும் மழையில் அடித்து சென்று விட்டது எங்களுக்கு உணவுக்கு பதிலாக அதுபோன்ற பொருட்களை வழங்குகள் என்று கோரிக்கை வைத்தார்கள்.
மாணவர்கள் விடுத்த கோரிக்கை ஏற்று ஒரு ஆசிரியராக, ஆசிரியர் சங்கத் தலைவராக இன்றைக்கு மாணவர்களுக்கு படிப்புக்கு தேவையான உபகரணங்களை வழங்கி சிறு உதவி செய்திருக்கிறோம். தொடர்ந்து இது போன்ற பணிகளை செய்வோம் என்றார் அவர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu