தாம்பரத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் கொரோனா விழிப்பணர்வு முகாம்
தாம்பரம் பஸ் நிலையத்தில் கொரோனா மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கிய போலீசார்.
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் பேரூந்து நிலையம் அருகே போக்குவரத்து புலனாய்வு காவல்துறை சார்பில் உதவி ஆணையாளர் ஸ்ரீதர் தலைமையில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
பொதுமக்களிடம் பண்டிகை காலம் என்பதால் கொரோனா தொற்று பரவாமல் இருக்க கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். எனவும் சமூக இடைவெளியை பின்பற்றுமாறும் கேட்டு கொண்டனர். மேலும் பொதுமக்கள் தாங்கள் அணிந்திருக்கும் நகைகள் மற்றும் ஊடமைகள் பாதுகாத்து வைத்து கொள்ளுமாறும் அறிவுறுத்தினர்.
மேலும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தலைகவசம் அணியுமாறும். சாலை விதிகளை மதித்து நடக்குமாறும், சாலை பாதசாரிகள் கடக்கும் போது வாகன ஓட்டிகள் சற்று கவனத்துடன் செல்லுமாறு கேட்டு கொண்டு, சாலை பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் வழங்கினர்.
இதில் போக்குவரத்து ஆய்வாளத் வெங்கடேசன், உதவி ஆய்வாளர் குணா உட்பட போக்குவரத்து மற்றும் சட்டம் ஓழுங்கு காவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu