வெள்ளம் சூழந்த இரும்புலியூரில் கர்ப்பிணியை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

வெள்ளம் சூழந்த இரும்புலியூரில் கர்ப்பிணியை மீட்ட தீயணைப்பு வீரர்கள்
X

இரும்புலியூரில், மழை நீர் குடியிருப்புகளை சூழ்ந்த நிலையில் நிறை மாத கர்ப்பிணி பெண்ணை மீட்ட தீயணைப்பு வீரர்கள். 

இரும்புலியூரில், மழை நீர் குடியிருப்புகளை சூழ்ந்த நிலையில், நிறை மாத கர்ப்பிணியை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

சென்னை தாம்பரம் அடுத்த இரும்புலியூர் பகுதியில் ரோஜா தோட்டம், அருள் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 500க்கும் மேற்பட்ட வீடுகள், மழை நீரால் சூழ்ந்து குடியிருப்புவாசிகள் வெளிவர முடியாமல் தவித்து வந்தனர். இடுப்பளவிற்கும், முழங்கால் அளவிற்கும் மழைநீர் தேங்கி, அத்தியாவசிய பொருட்களும் வாங்க செல்ல முடியாமல், மாடிகளில் தஞ்சம் புகுந்திருந்தனர். சிலரது வீடுகளுக்குள், மழை நீர் புகுந்தது.

இந்நிலையில் அருள் நகரில் ஒரு வீட்டின் இரண்டாவது மாடியில், லட்சுமி என்ற 9 மாத நிறைமாத கர்ப்பிணி பெண் , மழை நீரால் மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து அவரது கணவர் சுகன் கொடுத்த தகவலின் பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜசேகரன் தலைமையில் வெங்கடேசன், தர்மலிங்கம் உட்பட 7 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், அந்த பெண்ணை மீட்டு, 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கொண்டு வந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடும்பத்தோடு மீட்டு அழைத்து வந்த தீயணைப்பு துறையினருக்கு, அனைவரும் நன்றி தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!