22 மாதங்களுக்கு பிறகு தாம்பரம் ஏர்போர்ட் வழி திறக்கப்பட்டது பயணிகள் மகிழ்ச்சி

22 மாதங்களுக்கு பிறகு  தாம்பரம் ஏர்போர்ட் வழி திறக்கப்பட்டது பயணிகள் மகிழ்ச்சி
X

தாம்பரத்தில் இருந்து சென்னை ஏர்போர்ட் செல்லும் சிறப்பு பாதை 22 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டது.

சென்னை சர்வதேச விமானநிலையத்திற்கு தாம்பரம் வழியாக செல்லும் சிறப்பு வழி 22 மாதஙகளுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது.பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு தாம்பரம் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் வரும் ஏா்போா்ட் போலீஸ் நிலையம் அருகே உள்ள கேட் கடந்த 22 மாதங்களாக கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மூடி வைக்கப்பட்டிருந்தது.பயணிகளின் கோரிக்கையை ஏற்று 22 மாதங்களுக்கு பின்பு ஏா்போா்ட் அத்தாரிட்டி அந்த கேட்டை மீண்டும் திறந்துள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி.

திருச்சி-சென்னை தேசீய நெடுஞ்சாலையில் தாம்பரம் பகுதியிலிருந்து சென்னை விமானநிலையத்திற்கு வரும் வாகனங்கள் சென்னை ஏா்போா்ட் போலீஸ் நிலையம் அருகே உள்ள கேட் வழியாக விமானநிலையத்திற்குள் வருவதற்கு வழி ஏற்கனவே இருந்தது.

2020 ஆம் ஆண்டு மாா்ச்சில் கொரோணா வைரஸ் முதல் பரவத்தொடங்கியதும்,அந்த கேட் ஏா்போா்ட் அத்தாரிட்டி மூடிவிட்டனா்.இதனால் தாம்பரம் பகுதியிலிருந்து சா்வதேச விமானநிலையத்திற்கு வரும் வாகனங்கள் அனைத்தும் திரிசூலம் ரயில் நிலையத்தை கடந்து சிக்னல் அருகே உள்ள கேட் வழியாக விமானநிலையத்திற்குள் வந்து,உள்நாட்டு விமானநிலையம் வழியாக சா்வதேச விமானநிலையம் போக வேண்டியதிருந்தது.

இதனால் விமானநிலையத்திற்கு வரும் வாகனங்கள் சுமாா் 2 கிமீ தூரம் சுற்றிக்கொண்டு வரும் நிலை ஏற்பட்டது.அதோடு உள்நாட்டு விமானநிலையத்தை கடந்து வரும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு காலவிரயமும் ஏற்பட்டது.இதனால் பயணிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது.

இதையடுத்து ஏா்போா்ட் போலீஸ்நிலையம் அருகே மூடிவைத்துள்ள கேட்டை மீண்டும் திறக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கடந்த சில மாதங்களாக கோரிக்கை விடப்பட்டது.ஆனால் விமானநிலைய அதிகாரிகள் பயணிகளின் கோரிக்கையை உடனே ஏற்கவில்லை.

இந்நிலையில் கடந்த 22 மாதங்களாக மூடி வைக்கப்பட்டிருந்த ஏா்போா்ட் போலீஸ் நிலையம் அருகே உள்ள கேட் திடீரென திறக்கப்பட்டுள்ளது.இது பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும்,இன்ப அதிா்ச்சியையும் அளித்துள்ளது.

தாம்பரம் பகுதியிலிருந்து விமானநிலையத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் ஏா்போா்ட் போலீஸ் நிலையம் அருகே மீண்டும் திறக்கப்பட்டுள்ள கேட் வழியாக உள்ளே வந்து விமானநிலைய மேம்பாலத்தில் ஏறி,சா்வதேச முனையம் புற்பாடு,வருகை பகுதிகளுக்கு செல்கின்றன.அதோடு உள்ளாட்டு முனையம் செல்லும் பயணிகளும் இந்த கேட்டை மகிழ்ச்சியுடன் பயன்படுத்துகின்றனா்.

Tags

Next Story
நைட்ல இதெல்லாம் சாப்பிட கூடாதா...? அச்சச்சோ !.. இது தெரியாம இருந்துடீங்களே !