ஓலா மற்றும் ஊபர் வாடகை கால் டாக்சி ஓட்டுநர்கள் கார்களை நிறுத்தி போராட்டம்
தாம்பரத்தில் சாலையின் ஓரத்தில் நின்று டாக்சி ஓட்டுனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் கிறித்தவ கல்லூரி அருகே ஓலா மற்றும் ஊபர் கால்டாக்சி ஓட்டுநர்கள் தங்களது கார்களை சாலையின் பக்கவாட்டில் நிறுத்திவிட்டு, 50 க்கும் மேற்பட்டோர் சாலையில் பக்கவாட்டில் நின்று, பதாகைகளை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று துவங்கிய போராட்டத்தை காலவரையற்ற போராட்டமாக தொடர போவதாகவும் தெரிவித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஒட்டுநர்கள் 5 வருடத்திற்கு முன்பு நிர்ணயித்த விலை பட்டியலை மாற்றி அமைத்து 80% ஆக உயர்த்த வேண்டும், நிறுவனங்கள் 30% பெறும் கமிஷன் தொகையை 10% குறைக்க வேண்டும்.
டீசல் விலை ஏற்றத்திற்கு ஏற்ப அவ்வப்போது விலையை மாற்றி அமைக்க வேண்டும். மாநில அரசு கால் டாக்சிக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்து தர வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu