பெருங்களத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து 23 சவரன் நகை கொள்ளை
X
வீட்டில் இருந்த பீரோவில் நகைகள் திருடு போயின.
By - S.Kumar, Reporter |9 Dec 2021 6:30 PM IST
பெருங்களத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து 23 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
சென்னை தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் சரவணபவன் நகர், 1வது தெருவை சேர்ந்தவர் உமா (39), பெற்றோர் இறந்துவிட்டதால் தனது உறவினருடன் வசித்து வருகிறார்.
நேற்று காலை, அண்ணாநகரில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு சென்று விட்டு, வீடு திரும்பிய உமா, வீட்டின் பின்பக்க கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்பு உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கபட்டிருந்த 23 சவரன் தங்கநகைகள் மற்றும் 20,000 ரூபாய் ரொக்கப்பணம் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.
தகவலறிந்து வந்த பீர்கன்கரணை போலீசார், மற்றும் கைரேகை நிபுணர்கள், கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu