கார் ஓட்டுநர் கவனத்தை திசை திருப்பி ரூ. 1 லட்சம், 4 கிராம் நகை திருட்டு

கார் ஓட்டுநர் கவனத்தை திசை திருப்பி ரூ. 1 லட்சம், 4 கிராம் நகை திருட்டு
X

 நகை திருடுவது தொடர்பான சிசிடிவி காட்சி. 

பெருங்களத்தூரில், கார் ஓட்டுநரின் கவனத்தை திசை திருப்பி ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம், 4 கிராம் நகை திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

செங்கல்பட்டு மாவடம், தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூரை சேர்ந்தவர் கார் ஓட்டுனர் முருகேசன். இவர், தனது மனைவியின் தங்க நகையை, பெருங்களத்தூர், சீனிவாசாநகர், காந்தி ரோட்டில் உள்ள சிண்டிகேட் வங்கியில் அடகு வைத்து ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு வங்கி வெளியே வந்தார். பின்னர், காரில் சிறிது தூரம் சென்ற உடன், இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள், முருகேசனின் கவனத்தை திசைதிருப்பினர்.

பைக்கில் வந்தவர்கள், பணம் சிதறி கிடப்பதாக கூறவே, அதை நம்பிய முருகேசன், பணத்தை எடுக்க கீழே இறங்கிய போது மற்றொரு நபர், காரின் கதவை திறந்து நகை, பணத்தை திருடி சென்றுவிட்டார். ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம், 4 கிராம் தங்கத்தை திருடி சென்றுள்ளனர். இது குறித்து, பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் முருகேசன் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!