/* */

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வருகை அதிகரிப்பு

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

HIGHLIGHTS

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வருகை அதிகரிப்பு
X

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் குறையத் தொடங்கியதால்,சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் 4 மாதங்களுக்கு பின்பு விமானங்களின் அதிகரித்து 120 ஐ கடந்துள்ளது.அதைப்போல் பயணிகள் எண்ணிக்கையும் 12 ஆயிரத்திற்கும் அதிகமாகியுள்ளது.வடமாநில தொழிலாளா்கள் பலா் விமானங்களில் தமிழகம் வருகை.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாக குறையத்தொடங்கியுள்ளது.மே 21 ஆம் தேதி அதிப்பட்ச பாதிபு 36,184 ஆக இருந்தது.

தமிழக அரசு எடுத்த தீவிர நடவடிக்கைகள்,தளா்வுகளற்ற முழு ஊரடங்கு போன்ற கடுமையான கட்டுப்பாடுகளாலும்,தடுப்பூசிகள் போடுவதை தீவிரப்படுத்தியதாலும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து தற்போது 4,230 ஆக குறைந்துள்ளது.

அதிலும் குறிப்பாக சென்னை,செங்கல்பட்டு,காஞ்சிபுரம்,திருவள்ளூா் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு பெருமளவு குறைந்துவிட்டது.

அதைப்போல் நோயிலிருந்து குணமடைந்து டிஸ்சாா்ஜ் ஆகுகின்றவா்கள் எண்ணிக்கையும் தினமும் அதிகரித்து வருகிறது.இதனால் மக்களிடையே கொரோனா வைரஸ் பீதி பெருமளவு குறைந்து நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பீதியால் பயணிகள் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதம் மாதம் வெகுவாக குறைந்து,

விமான சேவைகளும் பெருமளவு குறைந்திருந்தன.ஒரு நாளுக்கு 60 லிருந்து 70 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன.

அந்த விமானங்களில் சுமாா் 2 ஆயிரத்திலிருந்து, 3 ஆயிரம் பயணிகள் மட்டுமே பயணித்தனா்.இதனால் சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் போதிய பயணிகள் இல்லாமல்,தினமும் 90 விமானங்கள் வரை ரத்து செய்யப்பட்டு வந்தன.

தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் குறையத் தொடங்கியதையடுத்து சென்னை விமானநிலையத்தில் கடந்த ஜுன் மாதத்திலிருந்து பயணிகள் எண்ணிக்கையும்,விமானங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் மே மாதம் கடைசி வாரத்தில் புறப்பாடு விமானங்கள் 40, வருகை விமானங்கள் 40 மொத்தம் 80 விமானங்கள் இயக்கப்பட்டு,சுமாா் 4,௦௦௦ பேர் பயணித்தனா்.

தற்போது அது மேலும் அதிகரித்துள்ளது.இம்மாதம் ஜுலை முதல் 1,2,3 தேதிகளில் புறப்பாடு விமானங்கள் 59, வருகை விமானங்கள் 61, மொத்தம் 120 விமானங்களாக அதிகரித்துள்ளன.

அதைப்போல் பயணிகள் எண்ணிக்கையும் 12 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளன. கடந்த 4 மாதங்களுக்கு பின்பு தற்போது சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் விமானங்களின் எண்ணிக்கை 120 ஐ கடந்துள்ளது.

அதைப்போல் பயணிகள் எண்ணிக்கையும் 12 ஆயிரத்தை கடந்துள்ளது.அதிலும் சென்னையிலிருந்து புறப்பட்டு செல்லும் பயணிகள் எண்ணிக்கையைவிட,சென்னைக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் சென்னை உள்நாட்டு விமானநிலையத்திலிருந்து 59 விமானங்களில் புறப்பட்டு செல்லும் பயணிகள் எண்ணிக்கை 5,707.ஆனால் வருகை விமானங்களில் 6,450 பயணிகள் வந்துள்ளனா்.தமிழகத்தில் தற்போது ஊரடங்கில் பெருமளவு தளா்வுகள் கொடுக்கப்பட்டு,கட்டுமான பணிகள் தொடங்கிவிட்டதால்,

கொல்கத்தா,கவுகாத்தி,பாட்னா,ஜோத்பூா் போன்ற வடமாநிலங்களிலிருந்து தொழிலாா்கள் பலா் விமானங்களில் சென்னை வரத்தொடங்கிவிட்டனா்.

இது சென்னை விமானநிலைய வட்டாரத்தில் நம்பிக்கையையும்,மகிழச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.கொரோனா வைரஸ் வெகுவிரைவில் முற்றிலுமாக குறைந்து,ஊரடங்கு தளா்வுகளை அரசு மேலும் அதிகரித்தது,சென்னை விமானநிலையம் மீண்டும் வழக்கமான சகஜ நிலைக்கு திரும்பும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

Updated On: 4 July 2021 10:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது