மழையால் குளமானது குரோம்பேட்டை அரசு மருத்துவமனை - நோயாளிகள் அவதி

மழையால் குளமானது குரோம்பேட்டை அரசு மருத்துவமனை - நோயாளிகள் அவதி
X

குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குள் புகுந்த மழை வெள்ளம்.

கனமழையால், குரோம்பேட்டை அரசு பொதுமருத்துவமனையில் வெள்ளநீர் புகுந்தது; இதனால், நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த குரோம்பேடை அரசு பொதுமருத்துவமனையில் நேற்று காலை தொடங்கிய மழை, இன்று காலை வரை கொட்டித் தீர்ந்தது. இந்த மழையால், குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் வெள்ளநீர் புகுந்து, 3 அடி வரை தேங்கியுள்ளது.


இதனால மருத்துவமனையில் இருந்த, உள்நோளிகள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்கள் அனைவரையும், பாதுகாப்பாக மாற்று இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். மருத்துவமனையின் பின்புறம் உள்ள பிணவறை முழுவதுமாக நீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால உள்நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாவது மட்டும் இல்லாமல், வெளிநோயாளிகளும் மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

மருத்துவமனைக்குள் புகுந்த வெள்ளநீரால், மருத்துவர்கள், செவிலியர்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். ஓவ்வொரு ஆணடும் மழைகாலங்களில் இதுபோன்ற நிலை உள்ளதால், மருத்துவமனை வளாகத்தை மழை வெள்ளம் பாதிக்காத வகையில் புதுப்பித்து தரவேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil