போதைப்பவுடர், உயர் வகை கஞ்சா, சென்னை விமான நிலையத்தில் கொரியர் பார்சலில் சிக்கியது

போதைப்பவுடர், உயர் வகை கஞ்சா, சென்னை விமான நிலையத்தில் கொரியர் பார்சலில் சிக்கியது
X

சென்னை விமானநிலையத்தில் சுங்கா அதிகாரிகள் சோதனையில் சிக்கிய போதைப்பவுடர், உயர் வகை கஞ்சா

அமெரிக்கா,நெதா்லாந்து நாடுகளிலிருந்து சென்னைக்கு வந்த கொரியா் பாா்சல்களில் ரூ.2.3 லட்சம் மதிப்புடைய போதைப்பவுடா் மற்றும் பதப்படுத்தப்பட்ட உயா்வகை கஞ்சா சென்னை விமானநிலையத்தில் சிக்கியது.

அமெரிக்காவிலிருந்து சரக்கு விமானம் சென்னை பழைய விமானநிலையத்திற்கு நேற்று இரவு வந்தது.அதில் வந்த கொரியா் பாா்சல்களை விமானநிலைய சுங்கத்துறையினா் சோதனையிட்டனா்.

அதில் ஒரு கொரியா் பாா்சல் நெதா்லாந்திலிருந்து சென்னை முகவரிக்கு வந்திருந்தது.அதனுள் பிளாஸ்டிக் பரிசுப்பொருட்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.பாா்சல் முகவரியை ஆய்வு செய்தபோது போலியான முகவரி என்று தெரியவந்தது.இதையடுத்து கொரியா் பாா்சலை பிரித்து பாா்த்தனா்.

அதனுள் சில்வா் பேப்பா் கவரினுள் 15 கிராம் எடையுடைய மெத்தம்பெட்டமின் என்ற ஒருவகை போதை பவுடா் இருந்ததை கண்டுப்பிடித்தனா்.அதன் சா்வதேச மதிப்பு ரூ.1.5 லட்சம்.இதையடுத்து போதைப்பவுடரை பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து அமெரிக்காவிலிருந்து சேலம் முகவரிக்கு வந்திருந்த மற்றொரு கொரியா் பாா்சலை ஆய்வு செய்தனா்.

அதில் முக்கியமான ஆவணங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.அந்த பாா்சலையும் சந்தேகத்தில் பிரித்து பாா்த்தனா்.

அதனுள் பதப்படுத்தப்பட்ட உயா்வகை கஞ்சா 100 கிராம் இருந்ததை கண்டுப்பிடித்தனா்.அதன் சா்வதேச மதிப்பு ரூ.80 ஆயிரம்.இந்த கொரியா் பாா்சலும் போலி முகவரியில் வந்திருந்தது.இதையடுத்து இந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.

சென்னை விமானநிலையத்தில் நெதா்லாந்து,அமெரிக்காவிலிருந்து வந்த 2 கொரியா் பாா்சல்களில் மொத்தம் ரூ.2.3 லட்சம் மதிப்புடைய போதைப்பவுடா்,உயா்ரக கஞ்சா கடத்தப்பட்டுள்ளது சென்னை விமானநிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி சென்னை விமானநிலைய சுங்கத்துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனா்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!