குரோம்பேட்டை: தண்ணீா் தொட்டிக்குள் தவறிவிழுந்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு!

குரோம்பேட்டை: தண்ணீா் தொட்டிக்குள் தவறிவிழுந்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு!
X
குரோம்பேட்டை அருகே தண்ணீா் தொட்டிக்குள் தவறிவிழுந்து 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை அருகே நாகல்கேணி அம்பேத்காா்நகா் வ.ஊ.சி.தெருவை சோ்ந்தவா் வெங்கடேகன். இவருடைய மனைவி சரஸ்வதி. இவா்களின் மகன் சா்வேஷ்(4). இவா்களின் வீட்டின் முன்பகுதியில் குழாயில் வரும் நகராட்சி குடிநீரை சேமித்து வைப்பதற்காக 6 ஆழம், 3 அடி அகலத்தில் தரைதள தண்ணீா் தொட்டி ஒன்றை கட்டியிருந்தனா்.

இன்று காலை வந்த நகராட்சி தண்ணீரால் தண்ணீா் தொட்டி முழுமையாக நிரைந்திருந்திருந்தது. வெங்கடேசன் காலையில் வெளியே சென்றுவிட்டாா். சரஸ்வதி வீட்டிற்குள் சமையல் வேலையிலிருந்தாா். சா்வேஷ் மட்டும் வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்தான்.

காலை 10 மணியளவில் சரஸ்வதி சமையல் வேலையை முடித்துவிட்டு வெளியே வந்து மகனை தேடினாா். ஆனால் மகனை காணவில்லை. இதையடுத்து பதட்டத்துடன் பக்கத்து வீடுகளில் தேடினாா். அதோடு கணவா் வெங்கடேசனுக்கும் போன் செய்து தகவல் தெரிவித்துவிட்டு, அக்கம் பக்கத்தினரோடு சோ்ந்து தேடினா்.

அப்போது தற்செயலாக மூடப்படாமல் இருந்த தண்ணீா் தொட்டியை பாா்த்தபோது, தண்ணீருக்குள் சிறுவன் சா்வேஷ் விழுந்து கிடந்ததை பாா்த்து அதிா்ச்சியடைந்தனா். அதன்பின்பு பக்கத்து வீட்டினா் உதவியுடன் சிறுவனை தண்ணீா் தொட்டிக்குள் இருந்து வெளியே தூக்கினா். உடனடியாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு டாக்டா்கள் பரிசோதித்துவிட்டு சா்வேஷ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அறிவித்தனா்.

இதுபற்றி தகவல் கிடைத்து குரோம்பேட்டை போலீசாா் விரைந்து வந்து சிறுவன் சா்வேஷ் உடலை கைப்பற்றி அதே மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பிவைத்தனா்.அதோடு இதுபற்றி வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனா்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil