கொரோனாவால் பாதிக்கப்பட்ட டிராவல்ஸ் அதிபா் மருத்துவமனை 3வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட டிராவல்ஸ் அதிபா் மருத்துவமனை 3வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை.
X

தற்கொலை செய்து கொண்ட ட்ராவல்ஸ் அதிபர் ராஜேந்திரன்

கொரோனா வைரஸ் நோயாளியான டிராவல்ஸ் அதிபா் மருத்துவமனை 3 வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூா் அருகே ரத்தினமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (52). இவர் டிராவல்ஸ் வைத்து நடத்தி வந்தாா். இவருக்கு சில தினங்களுக்கு முன்பு சளி இருமல் காய்ச்சல் இருந்தது. உடனே பரிசோதனை செய்தபோது, அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து ராஜேந்திரன் சிகிச்சைக்காக கடந்த செவ்வாய்க்கிழமை தாம்பரம் அருகே கேம்ப் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.அவருக்கு மூச்சுத் திணறல் காரணமாக ஆக்சிஜன் உடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனவே வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள் என்று மருத்துவமனை நிா்வாகம்,ராஜேந்திரன் குடும்பத்தினரிடம் நேற்று இரவு கூறியதாக தெரிகிறது.

குடும்பத்தினா் இன்று இரவு மட்டும் இங்கு சிகிச்சை அளிக்குமாறு உறவினர் கேட்டுக் கொண்டனா். அதன் பின்பு இன்று அதிகாலை வீட்டுக்கு சென்றுவிட்டனா். இன்று காலை ராஜேந்திரன் குடும்பத்தினருக்கு மருத்துவமனையிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது ராஜேந்திரன் இறந்துவிட்டதாக மருத்துவமனையில் தெரிவித்தனர். உடனடியாக ராஜேந்திரனின் உறவினார்கள் மருத்துவமனைக்கு சென்று விசாரித்தபோது ராஜேந்திரன் மருத்துவமனையின் 3வது மாடியிலிருந்து கீழே குதித்து உயிரிழந்துள்ளார் என தெரியவந்தது.

இதையடுத்து உறவினா்கள் ஆக்சிஜன் வழங்காததால் தான் ராஜேந்திரன் தற்கொலை செய்து கொண்டார் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி சேலையூா் போலீசாா் விசாரணை நடத்துகின்றனா்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!