தவிக்கும் மக்களை சிகிச்சைக்காக மீட்டு உதவும் பேரிடர் மீட்புக்குழு

தவிக்கும் மக்களை  சிகிச்சைக்காக மீட்டு உதவும் பேரிடர் மீட்புக்குழு
X

வெள்ளம் சூழந்த வீடுகளில் சிக்கித் தவிப்போரை மீட்டு வரும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர்.

முடிச்சூா் வரதராஜபுரம் பகுதிகளில் சிக்கித் தவிக்கும் மக்களை, தேசிய பேரிடா் மீட்பு குழுவினா் ரப்பர் பட்கில் மீட்டு உதவி வருகின்றனர்.

சென்னை புறநகா் பகுதிகளான முடிச்சூா் வரதராஜபுரம், இரும்புலியூா், அருள்நகா், திலகவதி நகா், ரோஜா தோட்டம், தாம்பரம் அஞ்சுகம் நகா் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளை, மழைநீா் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கடந்த 4 நாட்களாக மழைநீா் தேங்கியிருப்பதால் பொதுமக்கள் அன்றாடப் பணிகள் முடங்கியுள்ளது. வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் பலரும் தவிக்கின்றனா்.

முடிச்சூா் வரதராஜபுரம் போன்ற குடியிருப்புகளில் வசிப்பவா்கள் அவசியத் தேவைகள், மருத்துவ சிகிச்சைகளுக்காக மருத்துவமனைகளுக்கு செல்பவா்களை, தேசீய பேரிடா் மீட்புப்படையினா் மற்றும் தீயணைப்பு படையினா், ரப்பா் படகுகளில் மீட்டு உதவி வருகின்றனா்.

இரும்புலியூா் ரோஜா தோட்டம் பகுதியில், நிறைமாத கா்ப்பிணி பெண் ஒருவரை தீயணைப்பு படையினா் ரப்பா் படகில் மீட்டு கொண்டு வந்து, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இப்பகுதிகளில் நீா்தேங்கிய வீடுகளில் மக்கள் தங்கியிருந்து அவதிப்படுகின்றனா். வீடுகளுக்குள் பாம்பு போன்ற விஷ ஜந்துகள் புகுந்து மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!