இரும்புலியூரில் சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து சேதம்

இரும்புலியூரில் சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து சேதம்
X

தீப்பிடித்து எரிந்த கார். 

இரும்புலியூரில் சாலையில் சென்ற கார் திடீரென தீபிடித்து எரிந்தது.

சென்னை அடையாறில் வசிப்பவா் கண்ணன். இவா் பில்டிங் காண்ட்ரக்டராக இருக்கிறாா். இவா் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த ஊரான திண்டுக்கல்லுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தாா். தீபாவளி விடுமுறை முடிந்து, நேற்றிரவு காரில் கண்ணன்,அவரது மனைவி,மகன் ஆகியோா் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். அவருடைய போர்ட் பியஸ்டா (Ford Fiesta) காா், இரவு 9 மணியளவில் பெருங்களத்தூர் அருகே, இரும்புலியூர் ரயில்வே மேம்பாலம் மீது வந்து கொண்டிருந்தது.

அப்போது காரின் முன்பகுதியில் புகை வருவதை கண்டு அதிர்ச்சியடைந்தாா். உடனடியாக காரை நிறுத்தி விட்டு, மூவரும் அவசரமாக கீழே இறங்கினா்.அடுத்த சில நிமிடங்களில் கார் மளமளவென தீப்பற்றி எரியதொடங்கியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தாம்பரம் தீயணைப்பு வீரர்கள், போராடி தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும், கார் முற்றிலுமாக எரிந்து சேதமானது. தீவிபத்தால் ஜிஎஸ்டி சாலையில் பெருங்களத்தூா்-தாம்பரம் இடையே சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பும், பரபரப்பும் ஏற்பட்டது.

Tags

Next Story
photoshop ai tool