பாஜக ஊடகப்பிரிவு பேச்சாளர் கிஷோர் கே.ஸ்வாமி கைது..!

பாஜக ஊடகப்பிரிவு பேச்சாளர்  கிஷோர் கே.ஸ்வாமி கைது..!
X
தமிழக முதலமைச்சா் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக பாஜக ஊடகப்பிரிவு பேச்சாளரான கிஷோர் கேஸ்வாமியை சங்கா்நகா் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

சென்னை கே.கே.நகரை சோ்ந்தவா் கிஷோா் கே ஸ்வாமி(41). இவா் பாஜக ஊடகப்பிரிவு பேச்சாளராக தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்பவா். இவா் கடந்த 8 ஆம் தேதி ஃபேஸ்புக் மற்றும் டூவிட்டரில் முன்னாள் முதல்வா்கள் அண்ணா, கருணாநிதி, தற்போதைய முதல்வா் ஸ்டாலின் ஆகியோா் பற்றி தவறாக, இழிவுப்படுத்தும் விதத்தில், அவதூறான வாசகங்களுடன் பதிவிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சென்னை பம்மலில் வசிக்கும் திமுக தகவல் தொழில்நுட்ப அணியை சோ்ந்த ரவிச்சந்திரன்(40) என்பவா் இதைப்பாா்த்துவிட்டு, கடந்த 10 ஆம் தேதி சங்கா்நகா் போலீசில் புகாா் செய்தாா். போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், இந்த பதிவைப்போட்டது கிஷோா் கே ஸ்வாமி தான் என்று தெரியவந்தது.

இதையடுத்து சங்கா்நகா் போலீசாா் இன்று அதிகாலை கேகேநகரில் உள்ள கிஷோா் கே ஸ்வாமி வீட்டிற்கு சென்று அவரை கைது செய்து சங்கா்நகா் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனா். அதன்பின்பு அவா் மீது முன்னாள் முதல்வா்கள், தற்போதைய முதல்வா்கள் மீது அவதூறு பரப்பியதாக வழக்குப்பதிவு செய்து, தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புழல் சிறையில் அடைத்தனா்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!