தாம்பரம் அருகே கட்டிட பணியின் போது வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
மின்சார விபத்து ஏற்பட்ட இடம்.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பாண்டியன்(22), மற்றும் அவரது நண்பர் சந்துரு(24), இருவரும் கடந்த 15, நாட்களாக தாம்பரத்தை அடுத்த பதுவஞ்சேரி கரிகாலன் தெருவில் உள்ள வீடு ஒன்றில் கட்டிட பணி நடைபெற்று வரும் நிலையில் தூண் அமைப்பதற்காக பள்ளத்தை இரும்பு கடப்பாறையால் தோண்டிய போது பூமிக்கு அடியில் செல்லும் மின்சார கேபிளில் உரசியதில் மின்சாரம் தாக்கியது.
அலறல் சத்தம் கேட்டு வந்த அவரது நண்பர் சந்துரு காப்பாற்ற முயன்றபோது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் இருவரும் தூக்கிவீசப்பட்டனர்.இதில் பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் சிறிய காயங்களுடன் சந்துரு அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
உடனடியாக மின் வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மின்சாரம் துண்டிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு வந்த சேலையூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu