நில மோசடி- ஜேப்பியார் மகள் மீது வழக்குப்பதிவு!

சென்னையில் உள்ள ஜேப்பியாருக்கு சொந்தமான ஒரு இடத்தை அபகரிக்க முயன்றதாக அவரது மகள் ஷீலா உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரபல ஜேப்பியார் கல்வி குழுமத்தின் நிறுவன தலைவர் ஜேப்பியாரின் மனைவி ரெமிபாய் (79) சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில் சென்னை, ராயப்பேட்டை கணபதி தெருவில் தனது பெயரில் ஒரு வீடு இருக்கிறது என்றும், அந்த வீட்டின் கேட்டை கடந்த 2019ஆம் ஆண்டு மூன்று பேர் கொண்ட கும்பல் பூட்டியது என்றும் குறிப்பிட்டிருந்தார். வீட்டை பூட்டிய மூவரிடம் விசாரித்த போது அந்த இடம் நந்தனம் சிஐடி நகரை சேர்ந்த பைனான்சியர் முரளிதரன் என்பவருக்கு சொந்தமானது என்று கூறினார்கள்.இதுகுறித்து தனது கணவரிடம் செயலாளராக பணியாற்றிய ஜோஸிடம் கேட்டபோது, ஜேப்பியார் அந்த வீட்டின் மீது 5 கோடி ரூபாய் கடன் பெற்றதால் பூட்டிவிட்டனர் என்று கூறினார். ஆனால் இதில் ஏதோ முறைகேடு உள்ளது என குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில், ஜேப்பியாரின் செயலாளர் ஜோஸ், தனது சகோதரன் ஜஸ்டின், பைனான்சியர் முரளிதரன்(59), மற்றும் பினு பிரான்சிஸ்(52), ஜேப்பியார் மகள் ஷீலா ஆகிய ஐந்து பேர் இணைந்து மோசடி செய்துள்ளனர் என்பது தெரியவந்தது.அதில், ஜேப்பியார் அவசர கடனுக்காக ரூ.5 கோடி கடன் பெற்றதாக ரெமிபாய்க்கு தெரியாமல் வீட்டு பத்திரத்தை வைத்து பைனான்சியர் முரளிதரனுடன் இணைந்து நிலத்தை அபகரிக்க திட்டம் தீட்டி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட ஐந்து பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!