குட்கா விற்பனை: வடமாநிலத்தை சேர்ந்த இருவர் கைது

குட்கா விற்பனை: வடமாநிலத்தை சேர்ந்த இருவர் கைது
X

புகையிலைபொருட்கள் விற்றதாக கைது செய்யப்பட்ட வடமாநில வாலிபர்கள்

குட்கா விற்பனை செய்த வடமாநிலத்தை சேர்ந்த இருவர் கைது செய்து 150 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறை

சென்னை பெரும்பாக்கம் காவல் ஆய்வாளர் மகுடீஸ்வரி தலைமையிலான போலீசார் அரசங்கழனி சந்திப்பில் வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை மடக்கி சோதனை செய்ததில் அவரிடம் குட்கா பொட்டலங்கள் இருந்தது. விசாரணையில் அவர் ஏற்கனவே குட்கா விற்பனை வழக்கில் சிறை சென்று வந்த சுனில்குமார்(26), என்பது தெரியவந்தது.
சுனில்குமாரை பெரும்பாக்கம் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தபோது தாழம்பூர் பகுதியில் வாடகை வீட்டில் வைத்து தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை தயாரித்து வருவது தெரியவந்தது. அவர் கொடுத்த தகவலின் பேரில் பெரும்பாக்கம் போலீசார் தாழம்பூர் ஊராட்சி, நத்தம் பிரதான சாலை எம்ஜிஆர் தெருவில் சுனில்குமார் வசித்து வரும் வீட்டை சோதனையிட்டதில் தடைசெய்யப்பட்ட போதை வஸ்துக்களை மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
பின்னர் அங்கிருந்த வடமாநில இளைஞர் சச்சின் தாஸ்(21), என்பவரை கைது செய்த போலீசார் குடோனில் பதுக்கி வைத்திருந்த 150 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் காவல் நிலையத்தில் வைத்து இருவரிடமும் நடத்திய விசாரணையில் பீகாரை சேர்ந்த இருவரும் வாடகைக்கு எடுத்துள்ள வீட்டில் போதை வஸ்துகளான மாவா உள்ளிட்ட குட்கா பொருட்களை தாங்களாகவே தயாரித்து சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், மேடவாக்கம், சித்தாலப்பாக்கம், நாவலூர், கேளம்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.
சுனில்குமார் கடந்த 7ம் மாதம் தடைசெய்யப்பட்ட குட்காவை விற்பனை செய்த வழக்கில் இதே காவல் நிலையம் மூலம் சிறை சென்றதும், அப்பொழுது அவரிடமிருந்து 120 கிலோ குட்கா பறிமுதல் செய்ததும், கடந்த 2 மாதத்திற்கு முன்பு தான் சிறையில் இருந்து வெளியே வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!