மனைவி மற்றும் குழந்தைகளை அடித்து கொன்று விட்டு தனியார் வங்கி ஊழியர் தற்கொலை

மனைவி மற்றும் குழந்தைகளை அடித்து கொன்று விட்டு தனியார் வங்கி ஊழியர் தற்கொலை
X

குடும்பத்தினரை கொலை செய்து தற்கொலை செய்துகொண்ட தனியார் வங்கி ஊழியர்

கடன் பிரச்சனையால் தனியார் வங்கி ஊழியர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளை அடித்து கொன்று விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை.

சென்னை பெருங்குடி, பெரியார் சாலை தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் 7வது மாடியில் கடந்த ஒரு வருடமாக வாடகைக்கு குடியிருந்து வருபவர் மணிகண்டன்(42), இவர் தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு மாதகாலமாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.

மேலும் தனது நணர்களிடத்தில் பல லட்சம் ரூபாய், கடன் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் இன்று தனது மனைவி பிரியா(36), மற்றும் தரன்(10), தாஹன்(1), ஆகியோரை கொன்று விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மனைவியை கிரிக்கெட் மட்டையால் தலையில் அடித்து கொன்று விட்டு இரு குழந்தைகளையும் தலையணையால் அழுத்தியும் கொலை செய்து விட்டு, தானும் வேட்டியால் சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கடன் தொல்லை காரணமாக தனது குடும்பத்தினரை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது
தகவலறிந்து சென்ற துரைப்பாக்கம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இராயபேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
ai in future education